Suryakumar Yadav:மருந்து, ஊசி ஏதாவது தாங்க.. நேற்றைய போட்டிக்கு முன்பாக சூர்யகுமார் யாதவ் இதைக்கூற காரணம் என்ன?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் நேற்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இந்திய அணியின் பந்துவீச்சின் போது அக்ஷர் பட்டேல் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதேபோல் பேட்டிங்கின் போது சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசி 69 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் ஆட்டத்திற்கு பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகிய இருவரும் ஒரு நேர்காணலில் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் நேற்றைய போட்டிக்கு முன்பாக சூர்யகுமார் யாதவிற்கு இருந்த உடல்நல குறைவு தொடர்பாக அக்ஷர் பட்டேல் கேள்வி எழுப்பினார். அதற்கு சூற்யகுமார் யாதவ் பதிலளித்தார்.
From setting the stage on fire to a special pre-match tale! 🔥 😎
— BCCI (@BCCI) September 26, 2022
Men of the hour - @surya_14kumar & @akshar2026 - discuss it all after #TeamIndia's T20I series win against Australia in Hyderabad. 👍 👍- By @RajalArora
Full interview 🔽 #INDvAUS https://t.co/rfPgcGyO0H pic.twitter.com/rDWz9Zwh3h
அதன்படி, “நேற்றைய போட்டிக்கு முன்பாக காலையில் பிசியோதெர்பிஸ்ட் மற்றும் மருத்துவர் அறை முன்பாக சூர்யகுமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு உடல்நல குறைவு என்று கூறினார்கள். உண்மையில் அங்கு நடந்து என்ன” என்று அக்ஷர் பட்டேல் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சூர்யகுமார் யாதவ், “ஆம் நேற்று முன் தினம் இரவு முதல் எனக்கு தீவிரமான வயிற்று வலி இருந்தது. அத்துடன் காய்ச்சலும் அதிகமாக இருந்தது. அதனால் போட்டிக்கு முன்பாக நான் மருத்துவரிடம் சென்று எனக்கு என்ன செய்வீர்களோ தெரியாது. இன்று உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள். அப்போது நான் இப்படி உடல்நல குறைவால் இருப்பதை பார்த்து இருக்க மாட்டீர்கள். அதேபோல் நான் இன்றைய போட்டிக்குள் சரியாக தயாராக வேண்டும். அதற்காக ஊசி மருத்து மாத்திரை என்று எதை வேண்டுமானாலும் கொடுங்கள் என்று கேட்டன். அவர்கள் எனக்கு மருந்தை கொடுத்தனர்.
அதன்பின்னர் களத்தில் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்த உடன் எனக்கு அந்த வலி தொடர்பான எண்ணமே இல்லை. அது வேறு ஒரு உணர்வாக அமைந்தது” எனத் தெரிவித்தார். நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். அத்துடன் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட் வீழ்த்திய அக்ஷர் பட்டேல் தொடர் நாயகன் விருதை வென்றார்.