IND vs AUS WC 2023: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா.. பேட்டிங் செய்ய முடிவு; நெருக்கடி கொடுக்குமா இந்தியா?
IND vs AUS WC 2023: இந்த தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி என்பதால் தொடரை வெற்றியுடன் தொடங்க மிகவும் தீவிரமாக விளையாடுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
IND vs AUS WC 2023:
உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இந்தியா தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி என்பதால் தொடரை வெற்றியுடன் தொடங்க மிகவும் தீவிரமாக விளையாடுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இரு அணிகளும் சென்னையில் கடந்த மூன்று நாட்களாகவே முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். சென்னை மைதானத்தைப் பொறுத்தவரையில் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்கள், பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை அள்ளுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
சென்னையில் களமிறங்கும் அஸ்வின்
இந்திய அணியில் கடைசி நேரத்தில் இணைந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த போட்டியில் அஸ்வினின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என இந்திய அணியும் ரசிகர்களும் காத்துக்கொண்டு உள்ளனர். இவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு காரணமாக இருந்த ஜடேஜாவும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா மிகவும் முக்கியமான பந்து வீச்சாளராக இருப்பார். வேகப்பந்து வீச்சினைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடியவராக இருப்பார். அதே நேரத்தில் இந்திய அணி தரப்பில் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரின் தாக்குதல் அணிக்கு பலன் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா
இந்தியா பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்