மேலும் அறிய

IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்று:

டி20 உலகக் கோப்பையில் இன்று (ஜூன் 24) நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள்.

இதில் 5 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவுடன் இணைந்தார். இதனிடையே ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார் ரிஷப் பண்ட்.  இச்சூழலில் 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட அரைசதத்தை பதிவு செய்தார் ரோஹித் ஷர்மா.

பின்னர் வந்த சூர்ய குமார் யாதவும் ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அப்போது ரோஹித் ஷர்மா தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்படி ரோஹித் ஷர்மா 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் விளாசி மொத்தம் 92 ரன்களை குவித்தார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 16 பந்துகள் களத்தில் நின்று 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 31 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ரோஹித் படை:

ஆஸ்திரேலிய அணி 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ட்ராவிஸ் ஹெட் களம் இறங்கினார்கள். இதில் டேவிட் வார்னர் 6 ரன்கள் எடுத்து அர்ஸ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே நடையைக்கட்டினார். பின்னர் வந்த மிட்செல் மார்ஸ் ட்ராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்தார்.

இவர்களது பார்டனர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது 9 வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் மார்ஸ் விக்கெட்டை எடுத்த இந்த ஜோடியை பிரித்தார். இதனைத்தொடர்ந்து களம் இறங்கிய கிளென் மேக்ஸ்வெல்லும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இச்சூழலில் தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார் ட்ராவிஸ் ஹெட். வேகமாக ரன்களை சேர்ந்துகொண்டிருந்த இவர்களது பார்ட்னர்ஷிப் இந்திய அணியை மிரட்ட மீண்டும் தன் மாயாஜால சூழலில் மேக்ஸ்வெல்லை இரையாக்கினார் குல்தீப் யாதவ்.

அரையிறுதிக்கு செல்லும் இந்திய அணி:

அடுத்து வந்த மார்கட் ஸ்டோனிஸ் 2 ரன்களில் நடையைக்கட்ட இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்து அசத்தினார் ஜஸ்ப்ரித் பும்ரா. 43 பந்துகள் களத்தில் நின்ற ட்ராவிஸ் ஹெட் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உட்பட மொத்தம் 76 ரன்கள் எடுத்தார். இவரது விக்கெட்டை தொடர்ந்து மேத்யூ வாடே, டிம் டேவிட்டும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்படி இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்தது.

 

 

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget