மேலும் அறிய

IND vs AUS Final: இதுவரை 150 போட்டிகளில் நேருக்குநேர்.. யார் அதிக வெற்றி..? சிறந்த புள்ளிவிவரங்கள் என்ன? ஒரு பார்வை!

ICC Cricket world cup final: இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை எத்தனை ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளது. அதில், யார் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

உலகக் கோப்பை 2023ன் இறுதிப் போட்டியில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன. ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றொரு உலகக் கோப்பை பட்டத்தை சேர்க்குமா அல்லது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கோப்பையை வெல்லுமா என்பது நாளை இரவு தெரிந்துவிடும். 

இந்தநிலையில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை எத்தனை ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளது. அதில், யார் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

நேருக்கு நேர்: 

உலகக் கோப்பை இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட்டின் 151வது போட்டியாகும். 1980-ம் ஆண்டு இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி மட்டுமே வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், இதற்குப் பிறகும் கங்காருக்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி 83 ஆட்டங்களிலும், இந்திய அணி 57 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகளும் முடிவு இல்லை. 

உலகக் கோப்பையில் இரு அணிகளும் எப்படி..? 

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா இதுவரை 13 முறை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா 8 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 முறை மட்டுமே வென்றுள்ளது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த இலக்கை இரண்டு முறை சேஸ் செய்த இந்திய அணி 5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. 

150 ஒருநாள் போட்டிகளின் சிறந்த புள்ளிவிவரங்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

1. அதிகபட்ச டீம் ஸ்கோர்: இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்கோரை அடித்த சாதனை இந்திய அணி தனது பெயரில் பதிவு செய்துள்ளது. கடந்த 2023 உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்தூரில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை குவித்தது. 

2. குறைந்தபட்ச டீம் ஸ்கோர்: இந்த வெட்கக்கேடான சாதனையும் இந்திய அணியின் பெயரிலேயே உள்ளது. கடந்த 1981 ஜனவரி மாதம் சிட்னி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெறும் 63 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.

3. மிகப்பெரிய ரன் வித்தியாசத்தி வெற்றி: கடந்த 2004 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சிட்னி ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 208 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

4. பரபரப்பான வெற்றி: கடந்த 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

5. அதிக ரன்கள்: எப்போது போல இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டிகளில் சச்சின் மொத்தமாக 3077 ரன்கள் எடுத்துள்ளார்.

6. அதிக சதங்கள்: இங்கும் சச்சின் டெண்டுல்கரின் பெயரே முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 ஒருநாள் சதங்கள் அடித்துள்ளார்.

7. அதிக சிக்ஸர்கள்: இந்த பட்டியலில் ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 84 சிக்சர்களை அடித்துள்ளார்.

8. அதிக விக்கெட்டுகள்: முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ இந்தியாவுக்கு எதிராக 32 போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

9. சிறந்த பந்துவீச்சு : முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் கடந்த 2007 ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற வான்கடே ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெறும் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதுவே இரு நாடுகளுக்கு இடையே சிறந்த பந்துவீச்சாக இன்றுவரை உள்ளது. 

10. சிறந்த விக்கெட் கீப்பிங் (ஒட்டுமொத்தமாக) : ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் இந்தியாவிற்கு எதிராக 79 ஆட்டமிழப்புகளை செய்துள்ளார். அவர் 73 கேட்சுகள் மற்றும் 6 ஸ்டம்பிங் எடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget