![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ind vs Aus : இந்தியாவின் வெற்றியை பறித்த மழை! டிராவில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட்
Border Gavaskar Trophy : இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது,
![Ind vs Aus : இந்தியாவின் வெற்றியை பறித்த மழை! டிராவில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட் Ind vs Aus 3rd Test in Gabba Brisbane ends in a draw series level in 1-1 border gavaskar trophy Ind vs Aus : இந்தியாவின் வெற்றியை பறித்த மழை! டிராவில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/18/a6525c44edd2f48af874292ec8a96bd31734481152507936_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழையின் காரணமாக டிராவில் முடிந்தது.
பார்டர் கவாஸ்கர் தொடர்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது வருகிறது,இதன் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைப்பெற்றது, இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
காபா டெஸ்ட்:
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைப்பெற்றது, இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது, ஆஸ்திரேலியம் வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்சில் 445 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இதையும் படிங்க: Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
அடுத்ததாக தனது முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய இந்திய அணி டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் கே.எல் ராகுல் மட்டும் தனி ஆளாக போராடினார், அவருக்கு ஜடேஜா நல்ல ஒத்துழைப்பு தந்தார். இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி 216 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது, ஃபோலோ ஆனை தவிர்க்க 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி விக்கெட்டுக்கு பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஜோடி 47 ரன்கள் சேர்த்து ஃபலோ ஆனையும் தவிர்த்தது. இறுதியில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
The play has been abandoned in Brisbane and the match is drawn.
— BCCI (@BCCI) December 18, 2024
After the Third Test, the series is evenly poised at 1-1
Scorecard - https://t.co/dcdiT9NAoa#TeamIndia | #AUSvIND pic.twitter.com/GvfzHXcvoG
ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 180 ரன்கள் பின் தங்கி இருந்தது, இதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாட முயன்று இந்திய பவுலர்களுக்கு விக்கெட்டுகளை பரிசாக அளித்தனர், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய இந்திய அணி 8 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது, மேற்க்கொண்டு மழை பெய்ததால் போட்டியை தொடர முடியததால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.
தடையாய் வந்த மழை:
இந்த டெஸ்ட் போட்டியின் பெரும்பாலான நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தால், இந்த போட்டியில் முடிவு கிடைக்காமல் போனது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)