மேலும் அறிய

IND vs AUS 3rd Test: நாதன் லயன் சுழலில் சுருண்ட இந்தியா..! ஆஸ்திரேலியாவிற்கு 76 ரன்கள் டார்கெட்..!

IND vs AUS 3rd Test: இந்தூரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி 76 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த நிலையில், 2வது இன்னிங்சில் இந்திய அணி ஓரளவு நல்ல ஸ்கோர் எடுக்க முயற்சித்தது. புஜாரா மட்டுமே சிறப்பாக ஆடியதாலும், மற்ற வீரர்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் சொதப்பியதாலும் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சுருண்ட இந்தியா:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. நாக்பூர், டெல்லியில் நடைபெற்ற முதல் 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்தூரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

IND vs AUS 3rd Test: நாதன் லயன் சுழலில் சுருண்ட இந்தியா..! ஆஸ்திரேலியாவிற்கு 76 ரன்கள் டார்கெட்..!

முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ரன்களுக்கு சுருண்ட நிலையில், நேற்று 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 2வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியது. நேற்றே ஆஸ்திரேலிய அணி வலுவாக இருந்த நிலையில், இன்று இந்திய அணியின் சுழலிலும், வேகத்திலும் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட்டாகினர்.  197 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி அவுட்டாக்கியது. ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின்  3 விக்கெட்டுகளையும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

புஜாரா அரைசதம்:

இதையடுத்து, பின்தங்கிய நிலையுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு கடந்த இன்னிங்சில் போலவே மோசமான தொடக்கமே அமைந்தது. சுப்மன்கில் 5 ரன்களில் அவுட்டாக, கேப்டன் ரோகித்சர்மாவும் 12 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து சொதப்பி வரும் விராட்கோலி 13 ரன்களில் அவுட்டானார். ஜடேஜாவும் 7 ரன்களுக்கு அவுட்டாக, புஜாரா – ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக ஆடியது.

IND vs AUS 3rd Test: நாதன் லயன் சுழலில் சுருண்ட இந்தியா..! ஆஸ்திரேலியாவிற்கு 76 ரன்கள் டார்கெட்..!

ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க முயற்சித்தார். ஆனால், நாதன் லயன் சுழலில் இந்திய வீரர்கள் சீட்டுக்கட்டாய் சரிந்தனர். ஒருபுறம் புஜாரா நங்கூரமிட்டாலும், அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ், ஸ்ரீகர்பரத், அஸ்வின் நாதன் லயன் சுழலில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த புஜாரா 142 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் 8வது விக்கெட்டாக வெளியேறினார். இந்திய அணி கடைசியில் 10 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களுக்கு 2வது இன்னிங்சில் சுருண்டது. நாதன் லயன் 23.3 ஓவர்கள் வீசிய 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டார் மற்றும் குகென்மன் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

76 ரன்கள் டார்கெட்:

ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 75 ரன்கள் மட்டுமே முன்னிலை வகிப்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 2வது நாள் ஆட்டமும் இன்றுடன் நிறைவு பெற்றது. 76 ரன்கள் மட்டுமே டார்கெட் என்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. அதேசமயம் மைதானத்தில் நாளை பந்துகள் நன்றாக சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுத்தால் அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல் தாக்குதல் ஆட்டத்தின் போக்கும் மாற்றும் வாய்ப்பும் உண்டு.

IND vs AUS 3rd Test: நாதன் லயன் சுழலில் சுருண்ட இந்தியா..! ஆஸ்திரேலியாவிற்கு 76 ரன்கள் டார்கெட்..!

இதனால், வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவாக உள்ள இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு அசுரபலம் பெற்றால் மட்டுமே இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நாக்பூர், டெல்லி டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களில் முடிந்த நிலையில் இந்தூர் டெஸ்ட் போட்டியும் மூன்றே நாளில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தேதி குறிச்சாச்சு.. மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
வரும் 7ஆம் தேதி ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேதி குறிச்சாச்சு.. மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
வரும் 7ஆம் தேதி ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
நெல்லை: பாபநாசம் அருகே கிராமத்திற்குள் ஜாலியாக உலாவரும் கரடிகள்! அச்சத்தில் கிராம மக்கள்!
நெல்லை: பாபநாசம் அருகே கிராமத்திற்குள் ஜாலியாக உலாவரும் கரடிகள்! அச்சத்தில் கிராம மக்கள்!
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Embed widget