Ind vs Aus: கில்லை நீக்குவாரா சூர்யா! டி20 தொடரில் நீடிக்க போராடும் இந்தியா! ஹோபர்ட்டில் நடக்கப்போவது என்ன?
இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது டி20 போட்டி ஹோபார்ட்டில் உள்ள பெல்லெரிவ் ஓவலில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு தொடங்கும்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை ஹோபர்ட்டில் நடக்கிறது. தொடரில் நீடிக்க வேண்டுமென்றால் நாளை(நவம்பர் 2) இந்திய அணி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும்.
மெல்போர்னில் தோல்வி:
மெல்போர்னில் நடந்த போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. பேட்டிங்கில் அபிஷேக் சர்மாவைத் தவிர, இந்திய அணியில் இரண்டாவது டி20 போட்டியில் சரியாக விளையாடவில்லை. மூன்றாவது டி20யில் இந்திய அணி சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக துணைக்கேப்டன் கில் நீண்ட நாட்களாக விளையாடி வருவதால்
எத்தனை மணிக்கு தொடக்கம்?
இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது டி20 போட்டி ஹோபார்ட்டில் உள்ள பெல்லெரிவ் ஓவலில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு தொடங்கும்.
பிட்ச் ரிப்போர்ட்:
பெல்லெரிவ் ஓவலில் உள்ள ஆடுகளம் ஆரம்பத்தில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்காது, அதனால்தான் இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 155 ரன்கள் மட்டுமே. இருப்பினும், பந்து மற்றும் ஆடுகளம் பழையதாகும்போது, ஷாட்களை அடிப்பது எளிதாகிவிடும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறிய உதவி கிடைக்கும். இதனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எளிதாகிவிடும் இன்னிங்ஸின் பிற்பகுதியில் பேட்டிங் எளிதாகிவிடும் என்பதால், டாஸ் வெல்லும் அணி சேஸிங் செய்யத் தேர்ந்தெடுக்கும்.
போட்டி கணிப்பு
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் இதுவரை 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர், அதில் இந்தியா 20 முறை வென்றது, ஆஸ்திரேலியா 12 முறை வென்றது. இரண்டு போட்டிகள் எந்த முடிவும் இல்லாமல் முடிவடைந்தன. போட்டியின் முடிவு பெரும்பாலும் டாஸைப் பொறுத்தது, ஏனெனில் மாலையில் பனி ஒரு காரணியாக இருக்கலாம், மேலும் இங்கு சேசிங்கும் எளிதானது. இருப்பினும், ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் ஒரு T20 போட்டியிலும் தோல்வியடைந்ததில்லை.
இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் லெவன்: ஷுப்மான் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா , அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி
ஆஸ்திரேலியாவின் விளையாடக்கூடிய XI: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஷ், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், சீன் அபோட், தன்வீர் சங்கா.




















