IND vs AUS 2nd T20: பந்துவீச்சில் அசத்திய அக்ஷர்... வானவேடிக்கை காட்டிய வேட்.. இந்தியாவிற்கு 91 ரன்கள் இலக்கு
இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 90ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக ஆட்டம் மிகவும் தாமதமாக தொடங்கியது. இதன்காரணமாக 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேம்ரூன் க்ரீன் கடந்த போட்டியை போல் அதிரடியாக தொடங்கினார். எனினும் அவர் 5 ரன்கள் எடுத்திருந்த போது விராட் கோலியின் சிறப்பான த்ரோ மூலம் ரன் அவுட்டாகினார். அதன்பின்னர் வந்த மேக்ஸ்வேல் அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானர். அடுத்து வந்த டிம் டேவிட் 2 ரன்களுடன் அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த மேத்யூ வேட் கேப்டன் ஃபின்ச் உடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார்.
.@akshar2026 put on an impressive show with the ball & was #TeamIndia's top performer from the first innings of the second #INDvAUS T20I. 👏 👏
— BCCI (@BCCI) September 23, 2022
A summary of his performance 🔽 pic.twitter.com/FXS0nvxlPv
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் 15 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். அவர் பும்ரா வீசிய யார்க்கர் பந்தில் க்ளின் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 5 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்திருந்தது. இறுதி 3 ஓவர்களில் மேத்யூ வேட் அதிரடி காட்டினார். அவர் 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 91 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணியில் அக்ஷர் பட்டேல் சிறப்பக பந்துவீசி 2 ஓவர்களில் 13 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்யும். ஒருவேளை இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துவிடும். ஆகவே இந்தப் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.