மேலும் அறிய

IND Vs AUS, Match Highlights: ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா; 99 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியோடு தொடரையும் வென்ற இந்தியா..!

IND Vs AUS, Match Highlights: ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 140 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது.

IND Vs AUS, Match Highlightsஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது. 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் சேர்த்தது. 

அதன்படி, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலககுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் மற்றும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றினார். 

அதன் பின்னர் நிதானமாக ஆடி வந்த ஆஸ்திரேலிய அணி கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்தது. குறிப்பாக வாரன்ர் விக்கெட் விழுந்ததைப் பற்றி கவலைப் படாமல் ஆடிக்கொண்டு இருந்தார். ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டது. 

இதனால் போட்டி தடைபட்டதால் போட்டி ஓவரும் வெற்றி இலக்கும் குறைக்கப்பட்டது. அதாவது 33 ஓவர்களில் 317 ரன்கள் சேர்த்தால் வெற்றி என மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த ஆஸ்திரேலிய அணி 13வது ஓவருக்கு முன்னதாக வார்னர் தனது கை உறைகளை மாற்றிக்கொண்டார். இதனால் இடதுபுறம் பேட்டிங் பிடிக்கும் வார்னர் வலது புறத்தில் பேட்டிங் பிடித்தார். இந்த ஓவரை வீசிய அஸ்வினுக்கு சிரிப்பாக இருந்தாலும், அவரும் சவால் அளிக்கும் வகையில் பந்து வீசினார். அந்த ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு சிங்கிள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். ஆனால் அந்த ஓவரில் அஸ்வின் லபுசேனே விக்கெட்டை வீழ்த்தினார்.

அதன் பின்னர் அதேபோல் அஸ்வின் வீசிய 15வது ஓவரிலும் வலது புறத்தில் பேட்டிங் பிடித்த வார்னர், அஸ்வின் பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தில் வார்னரை எல்.பி.டபள்யூ முறையில் அவுட் செய்தார். அதே ஓவரில் ஜோஸ் இங்லீஸ் விக்கெட்டையும் எல்.பி.டபள்யூ முறையில் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தார். அதன் பின்னர் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டினை ஜடேஜா கைப்பற்றினார். அதிரடி ஆட்டக்காரர் கேம்ரூன் க்ரீன் விக்கெட்டினை ரன் அவுட் முறையில் இஷான் கிஷன் கைப்பற்றினார். 

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 140 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. அந்த நிலையில் கைகோர்த்த அபோட் மற்றும் ஹோசல்வுட் கூட்டணி சிறப்பாக ரன்கள் குவித்தது. இவர்கள் இருவரும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 44 பந்தில் 77 ரன்கள் சேர்த்தது. 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 28.2ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஜடேஜா மற்றும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. 

Warner Wicket: வலது கையில் பேட்டிங்.. சோக்கு காட்டிய வார்னர்.. சோலியை முடித்து விட்ட அஸ்வின்!

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget