மேலும் அறிய

Watch Video: நேராக வந்த பந்து: ஸ்மித்தின் கேட்சை கோட்டைவிட்ட விராட் கோலி... வைரலாகும் வீடியோ!

ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸின் 16வது ஓவரின் போது, ​​அக்சர் படேலின் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த கேட்சை விராட் கோலி கைவிட்டார். 

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி 2023 நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று தொடங்கியது. நடந்து கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இரு அணிகளுக்கும் இது இறுதித் தொடராகும். ஜூன் 8 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கான முதல் இரண்டு இடங்களை பெறும். 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் டோட் மர்பி ஆகியோருக்கு வாய்ப்பளித்தது. அதேபோல், இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கே.எஸ் பாரத் ஆகியோர் அறிமுகமானார்கள். 

இந்தநிலையில், முதல் நாள் தொடக்கத்தில் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி , உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னரை அடுத்தடுத்து வெளியேற்றினர். தொடர்ந்து மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர். ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸின் 16வது ஓவரின் போது, ​​அக்சர் படேலின் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த கேட்சை விராட் கோலி கைவிட்டார். 

ஸ்மித் டிரைவிற்காக விளையாடும்போது, பேட்டிங்கின் விளிம்பில் பட்டு விராட் நின்ற பக்கம் வேகமாக சென்றது. அப்போது, முதல் ஸ்பிப்பில்  நின்ற விராட் கோலி கையை உயர்த்தியபோது, கைகளில் பட்டு எகிறியது. விராட் மட்டும் அந்த கேட்ச்சை எடுத்திருந்தால் ஸ்மித்தின் விக்கெட்டை இந்தியா கைப்பற்றியிருக்கும். 

இந்தியாவிற்கு எமனாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்:

ஸ்மித் டெஸ்ட் வடிவத்தில் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் 14 போட்டிகளில் 72.58 சராசரியுடன் 1742 ரன்கள் எடுத்துள்ளார். 

இந்தியா அணி விவரம்:

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்

ஆஸ்திரேலிய அணி விவரம்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், டாட் மர்பி, நாதன் லியான், ஸ்காட் போலண்ட்

தலைப்பு செய்திகள்

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget