மேலும் அறிய
Advertisement
IND vs AUS 1st ODI: பந்துவீச்சில் அசத்திய முகமதுகள்; 188 ரன்களுக்குள் சுருண்ட ஆஸ்திரேலியா..!
IND vs AUS 1st ODI: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிஸ் ஹெட்டை முகமது சிராஜ் தனது சிறப்பான பந்து வீச்சினால் போல்ட் ஆக்கினார். 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டினை இழந்தது அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸிமித் களமிறங்கினார். நிதானமாக ஆடிவந்த இந்த ஜோடியை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பிரித்தார். இவரது பந்துவீச்சில் நிதானமாக அடிவந்த ஸ்மித் 30 பந்தில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் அதிரடியாக ஆடிவந்த மிட்ஷெல் மார்ஸ் 65 பந்தில் 10 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 81 ரன்கள் சேர்த்த நிலையில், ஜடேஜாவுன் சுழலில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர், இந்திய பந்து வீச்சாளர்கள் நெருக்கடி மேல் நெருக்கடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
மிகவும் பலமான அஸ்திரேலிய அணியில் இன்று தொடக்க ஆட்டக்காரர் மிட்ஷெல் மார்ஸைத் தவிர ஒரு பேட்ஸ்மேன் கூட நிலையாக ஆடவில்லை. அந்த அணி இறுதியில் 50 ஓவர்கள் கூட பேட்டிங் செய்ய முடியாமல் ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளும், ஷமி 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion