ICC World Cup West Indies: ஷாக்.. முதன்முறையாக உலகக்கோப்பைக்கே தகுதி பெறாமல் வெளியேறிய வெ.இண்டீஸ்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
ICC World Cup West Indies: ஐசிசி உலக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளது.
ICC World Cup West Indies: ஐசிசி உலக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளது.
உலகக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட, 1975ஆம் ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த உலக்கோப்பை நடத்தப்பட்ட 1979ஆம் ஆண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது மட்டும் இல்லாமல், 1983ஆம் ஆண்டு உலக்கோப்பையிலும் இறுதிப் போட்டி வரை சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி உலககோப்பை வரலாற்றில் முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியுள்ள மிக மோசமான வரலாறு கிரிக்கெட் உலகில் அரங்கேறியுள்ளது.
உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாடிய அணிகள் என்றால் அது இலங்கையும், வெஸ்ட் இண்டீஸும் தான். இரு அணிகளும் மற்ற கத்துக்குட்டி அணிகளை எளிதில் வீழ்த்தி உலக்கோப்பையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 10 அணிகள் களமிறங்கிய லீக் போட்டியில், எப்படியோ இரண்டு போட்டிகளில், வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் சூப்பர் சிக்ஸ் சுற்றில் கட்டாய வெற்றியில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த அணி வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல், 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின்னர், களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து, 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் உலக்கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பினை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்துள்ளதால், அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எவ்வளவு பெரிய மைதானமாக இருந்தாலும் சிக்ஸர்கள் விளாசுவதுற்கு சிரமமே படாத வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்த போட்டியில், மொத்தம் 2 சிக்ஸர்கள் தான் விளாசியுள்ளனர். அதுவும் கடைசி வீரராக களமிறங்கிய அல்ஜாரி ஜோசப் மற்றும், ஹோல்டர் என இருவரும் தலா ஒரு சிக்ஸர் விளாசியுள்ளனர். ஹோல்டர் மட்டும் அதிகபட்சமாக 45 ரன்கள் விளாசியிருந்தார்.
ஸ்காட்லாந்து அணியின் பிரண்டன் மெக்முலன் 3 விக்கெட்டுகளும், மார்க் வாட், கிரிஸ் ஜோல், கிரிஸ் கிரேவிஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி மிகவும் பொறுமையாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலககோப்பைக்கான பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. குறிப்பாக, ஸ்காட்லாந்து அணியின், பிரண்டன் மெக்முலன் மற்றும், மேத்யூவ் சிறப்பாக விளையாடி அரைசதத்தைக் கடந்து அணியை வெற்றிபெறச் செய்தனர்.