ICC WORLD CUP 2023: 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில்...ஒரு போட்டியில் எடுக்கப்பட்ட அதிக ரன்கள்! விவரம் இதோ!
48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் எடுக்கப்பட்ட அதிக ரன்கள் (771) என்ற சாதனையை நேற்று (அக்டோபர் 28) நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மோதிய போட்டி பெற்றுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது. 48 லீக் ஆட்டங்களை கொண்ட இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உலகக் கோப்பை தொடரில் பல்வேறு விதமான சாதனைகள் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று (அக்டோபர் 28) நடைபெற்ற போட்டியில் நிகழ்ந்த சாதனையை பார்ப்போம்:
இமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மலாவில் நேற்று நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
ஒரு போட்டியில் எடுக்கப்பட்ட அதிக ரன்கள்:
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதன்படி, 65 பந்துகள் களத்தில் நின்ற டேவிட் வார்னர் 81 ரன்கள் எடுத்தார்.
அதேபோல், மற்றொரு புறம் களத்தில் நின்ற டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 10 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 109 ரன்களை குவித்தார்.
அதேபோல் அந்த அணியின் வீரர்கள் மிட்ச்செல் மார்ஸ் 36 ரன்கள், கிளென் மேக்ஸ்வெல் 41 ரன்கள், ஜோஷ் இங்கிலிஸ் 38 ரன்கள், பாட் கம்மின்ஸ் 37 ரன்கள் என 49. 2 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 388 ரன்களை குவித்தது.
பின்னர், 389 ரன்கள் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட நியூசிலாந்து அணியும் ருத்ர தாண்டவம் ஆடியது. 389 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தான் ஆஸ்திரேலிய அணியிடம் ஆட்டத்தை விட்டுக்கொடுத்தது.
அதன்படி, அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 383 ரன்கள் எடுத்தது. இதில் ரச்சின் ரவீந்திரா 89 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரி, 5 சிக்ஸ்ர்கள் என மொத்தம் 116 ரன்களை குவித்தார்.
அதேபோல், ஜேம்ஸ் நீஷம் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 58 ரன்களும், டேரில் மிட்செல் 51 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என மொத்தம் 54 ரன்களும் எடுத்தனர்.
இப்படி, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 388 ரன்களும், அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 383 ரன்களும் எடுக்க மொத்தம் 771 ரன்கள் என்ற அடிப்படையில், 48 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் எடுக்கப்பட்ட அதிக ரன்களாக இது பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Virat Kohli: கிங் கோலியின் பேட்டிங்கை பார்க்க வந்த அமெரிக்க ரசிகர்.. வீணாய் போன 7,732 மைல் தூர பயணம்..!
மேலும் படிக்க: Rohit Sharma : மைல்கற்களை தகர்த்தெறியும் இந்திய வீரர்கள்..புதிய சாதனையை படைத்தார் ஹிட்மேன் ரோஹித்..!