Watch Video: பந்து அவரை பிடிச்சதா.. அவர் பந்தை பிடிச்சாரா..- வைரலாகும் சூப்பர் கேட்ச் வீடியோ
மகளிர் உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை பிடித்த கேட்ச் வேகமாக வைரலாகி வருகிறது.
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நியூசிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 226 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. அப்போது ஆட்டத்தின் 5ஆவது ஓவரில் இங்கிலாந்து வீராங்கனை வின்ஃபில்ட் ஹில் பந்தை பாயிண்ட் திசையில் திருப்ப முற்பட்டார். அப்போது பாயிண்ட் திசையில் ஃபில்டிங் செய்து கொண்டிருந்த டியாண்டிரா டாட்டின் சிறப்பாக டைவ் அடித்து ஒரு கையில் லாவகமாக பந்தை பிடித்து அசத்தினார். அவரின் அந்த கேட்ச் மிகவும் வைரலாகி வருகிறது.
YO. YOU JUST CANNOT. OUTSTANDING CATCH BY DOTTIN.#CricketTwitter #CWC22 #Dottin #ENGvWI pic.twitter.com/e0xLfM23oC
— Krithika (@krithika0808) March 9, 2022
இந்தக் கேட்சை ஐசிசியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்த தொடரின் சிறப்பான கேட்ச்களில் ஒன்று இது எனக் கூறியுள்ளது. இந்த கேட்ச் தொடர்பாக பலரும் பாராட்டி பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
WHAT. A. CATCH! 🤯
— ICC (@ICC) March 9, 2022
A contender for catch of the tournament! 🔥#CWC22
The West Indies have got to be the most exciting, most talented cricketing nation ever! Ridiculous athleticism! Yeses 😭🔥 #CWC22 pic.twitter.com/CV0uKT6Yl9
— Ongama (@imongamagcwabe) March 9, 2022
சற்று முன்பு வரை இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 30 பந்துகளில் 26 ரன்கள் இங்கிலாந்து மகளிர் அணிக்கு தேவைப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்