மேலும் அறிய

PAK vs ENG, Final Match Highlights: பாகிஸ்தானை பஞ்சராக்கிய இங்கிலாந்து...! 12 வருடத்திற்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தல்!

ICC T20 WC 2022, PAK vs ENG: பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி முடிந்தது. பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்    8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது.

முதலில் களமிறங்கிய கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அவர் 3 பவுண்டர்கள் மற்றும் 1 சிக்ஸரை விளாசினார். அவர் ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக, முதல் ஓவரிலேயே ஹேல்ஸ் நடையைக் கட்டினார். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய இந்த ஜோடியை பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே பிரித்தது.
இதையடுத்து களம் புகுந்த பிலிப் சால்ட் 10 ரன்களிலும், ஹாரி ப்ரூக் 20 ரன்களிலும் நடையைக் கட்டினர்.

ஹாரிஸ் ரவுஃப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷஹீன் அப்ரிடி, ஷதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 16 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது.

பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வின்னிங் ஷாட்டை அடித்தார். இவ்வாறாக 19 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் அரை சதம் (49 பந்துகளில் 52 ரன்கள்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2010 ஆண்டில் கடைசியாக டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரண்டாவது முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து எதிரான இறுதிப்போட்டியில் 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி 12 ரன்கள் எடுத்தது. சாம் கர்ரன் வீசிய 5 வது ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்த ரிஸ்வான் க்ளீன் போல்டானார்.  இதையடுத்து, 8வது ஓவரின் முதல் பந்தில் முகமது ஹாரிஸ் ஆட்டமிழந்தார். அவர் ஸ்டோக்சிடம் கேட்ச் ஆனார். அடில் ரஷித் பந்துவீசினார். 8 ரன்களில் நடையைக் கட்டிய ஹாரிஸை தொடர்ந்து ஷான் மசூத் களமிறங்கினார்.

10 ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இஃப்திகார் அகமது வந்தவேகத்தில் பெவிலியன் சென்றார். அவர் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் ஆனார். 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 106 ரன்கள் எடுத்தது.

ஆட்டம் இவ்வாறாக சென்று கொண்டிருந்தபோது ஷான் மசூத் 38 ரன்கள் எடுத்திருந்தபோது சாம் கர்ரன் பந்துவீச்சில் லிவிங்ஸ்டனிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

Glenn Maxwell Leg Fracture: நண்பன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. தவறி விழுந்து காலை முறித்துகொண்ட மேக்ஸ்வெல்..!

இதையடுத்து கிறிஸ் ஜோர்டன் வீசிய 18 ஆவது ஓவரில் ஷதாப் கான் ஆட்டமிழந்தார். அவர் அப்போது 20 ரன்கள் எடுத்திருந்தார்.  இந்த ஆட்டத்தில் சாம் கர்ரன் மூன்று விக்கெட்டுகளை அள்ளினார். அடுத்தபடியாக அடில் ரஷித் 2 விக்கெட்டுகளை சுருட்டினார்.

கடந்த 2019 ம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK”2026 CM நான் தான்” EPS-க்கு விஜய் BYE! டார்கெட் உதயநிதிSeeman Angry on Vijayalakshmi |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
அதிமுக-காரன் பணத்துல சளைச்சவன் இல்ல.. தேர்தல்ல நாங்களும் பண்ணுவோம்! முன்னாள் அமைச்சர் பேச்சு
அதிமுக-காரன் பணத்துல சளைச்சவன் இல்ல.. தேர்தல்ல நாங்களும் பண்ணுவோம்! முன்னாள் அமைச்சர் பேச்சு
HBD MK Stalin: குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
Chennai Mini Bus: சென்னைவாசிகளே! 72 புதிய வழித்தடங்களில் இனி மினி பேருந்து - என்னென்ன ரூட்டு தெரியுமா?
Chennai Mini Bus: சென்னைவாசிகளே! 72 புதிய வழித்தடங்களில் இனி மினி பேருந்து - என்னென்ன ரூட்டு தெரியுமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
Embed widget