AUS vs SL, 1 Innings Highlight: குஷல், பனுகா, அசலங்கா அதிரடி : ஆஸ்திரேலியாவிற்கு 157 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது இலங்கை
ICC T20 WC 2021, AUS vs SL: இலங்கை அணியின் குசல் பெரெரா, பனுகா மற்றும் அசலங்கா அதிரடியில் ஆஸ்திரேலியாவிற்கு இலங்கை அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய பதும் நிசங்காவும், குசல் பெரராவும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்க முயற்சித்தனர். ஆனால், தொடக்க வீரர் நிசாங்கா 9 பந்தில் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த குசல் பெரோராவும், சரித் அசலங்காவும் அதிரடியை காட்டினர். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 43 பந்தில் 65 ரன்களை எடுத்தனர்.
அணியின் ஸ்கோர் 78ஐ எடுத்திருந்தபோது அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அசலங்கா ஜம்பா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் குசல் பெரோராவும் ஸ்டார்க் பந்தில் போல்டானார். அவர் 25 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 35 ரன்களை எடுத்து வெளியேறினார். அடுத்துவந்த அவிஷ்கா பெர்ணான்டோ 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், அணியின் ரன்ரேட் சட்டென்று குறையத்தொடங்கியது.
பின்னர், கடந்த போட்டியில் அசத்திய பானுகா ராஜபக்சே இந்த போட்டியிலும் அசத்தினார். அவர் தனி ஆளாக அதிரடி காட்டினார். ஆனால், மறுமுனையில் எந்த வீரரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஹசரங்கா 2 பந்தில் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சனகா பந்துகளை விரயம் செய்தார். அவர் கடைசி கட்டத்தில் 19 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தார். பனுகா ராஜபக்ஷே 26 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 33 ரன்களுடனும், கருணரத்னே 6 பந்தில் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஆடம்ஜம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி 4.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்