SL vs BANG, 1 Innings Highlight: இலங்கை பந்துவீச்சை நொறுக்கிய வங்காளதேசம்: 172 ரன்களை சேஸ் செய்யுமா ஸ்ரீலங்கா?
ICC T20 WC 2021, SL vs BANG: உலககோப்பையில் சூப்பர் 12 ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 171 ரன்களை குவித்துள்ளது.
டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்று போட்டி நேற்று தொடங்கியது. இதையடுத்து, குரூப் 1 பிரிவில் இலங்கை அணியும், வங்காளதேச அணியும் ஷார்ஜா மைதானத்தில் நேருக்கு நேர் மோதியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சனாகா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய லிட்டன்தாஸ் மற்றும் முகமது நைம் அதிரடியாகவும், நிதானமாகவும் ஆட்டத்தை தொடங்கினர். அணியின் ஸ்கோர் 40 ரன்களை எட்டியபோது தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 16 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களை எடுத்து வெளியேறினார். பின்னர், களமிறங்கிய அனுபவம் மிகுந்த ஷகிப் அல்ஹசன் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். ஆனால், 7 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களை எடுத்தபோது கருணரத்னே பந்தில் ஆட்டமிழந்தார்.
இீதையடுத்து ஜோடி சேர்ந்த முஸ்தபிர் ரஹிம் மற்றும் முகமது நைம் ஜோடி விறுவிறுவென்று ரன்களை குவிக்கத் தொடங்கினர். குறிப்பாக முஸ்தபிர் ரஹிம் அதிரடியாகவே ஆடினர். முகமது நைம் அரைசதம் அடித்த சிிது நேரத்தில் பெர்னாண்டோ பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஆனாலும், மறுமுனையில் முஸ்தபிர் ரஹீம் தொடர்ந்து அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.
வங்காளதேச அணி தங்களது அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. முஸ்தபிர் ரஹீம் 37 பந்தில் 5 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 57 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கேப்டன் மஹமுதுல்லா 2 பவுண்டரியுடன் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார். வங்கதேச அணியில் ஆபிப் ஹூசைன் தவிர களமிறங்கிய அனைவரும் இரட்டை இலக்க ரன்களை சேர்த்தனர்.
இலங்கை அணியில் கேப்டன் சனகா உள்பட 7 வீரர்கள் பந்துவீசினர். துஷ்மந்தா சமீரா 4 ஓவர்கள் வீசி அதிகபட்சமாக 41 ரன்களை வாரி வழங்கினார். கருணரத்னே 3 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
T20 WC, Ind vs Pak: 2019ல் இருந்து வெற்றிநடை போடும் இந்தியா..! பாகிஸ்தானையும் சம்பவம் செய்யுமா...?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்