மேலும் அறிய

South Africa: 5 வது முறை... அரையிறுதியில் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்காவின் சோக வரலாறு!

உலகக் கோப்பை தொடரில் 5 வது முறையாக அரையிறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

1992 முதல்...

இனவெறி காரணமாக கிரிக்கெட் உலகில் 30 வருடங்கள் தடையை சந்தித்த அணி தென்னாப்பிரிக்கா.   இந்த அணி கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 5 முறை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், இதில் ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.  

கடந்த 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. பின்னர் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 232 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அரையிறுதியில் 5 முறை தோல்வி:

பின்னர், கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டது தென்னாப்பிரிக்கா. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னப்பிரிக்க அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்படி ஆட்டம் ட்ரா ஆனதால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை ரன் ரேட் அடிப்படையில் இழந்தது தென்னாப்பிரிக்கா.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை கண்டது தென்னாப்பிரிக்க அணி. அந்த போட்டியில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது தென்னாப்பிரிக்கா. இந்த போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது அந்த அணி. பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதானால் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதியுடன் வெளியேறியது.

இதுதவிர 1996, 2007-ஆம் ஆண்டுகளில் கால் இறுதிப் போட்டிகளில் தோல்வியுற்று தென்னாப்பிரிக்கா நடையை கட்டியது.  இச்சூழலில் தான் இன்று (நவம்பர் 16) கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

முன்னதாக இந்த போட்டியில் முதல் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 49. 4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் டேவிட் மில்லர் 101 ரன்கள் எடுத்தார். பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47. 2 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடரில் 5 வது முறையாக அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்திருப்பது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இச்சூழலில், வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது இந்திய அணி.

மேலும் படிக்க: SA Vs AUS Semi Final: தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அரையிறுதி... இன்றும், நாளையும் மழை பெய்தால் வெற்றி யாருக்கு?

மேலும் படிக்க: Narendramodi: குஜராத்தில் நடைபெறும் இறுதிப் போட்டி... நேரில் கண்டுகளிக்க வரும் பிரதமர் நரேந்திர மோடி?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
Top 10 News Headlines: மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
Gold Rate Peaks: அடங்கப்பா.. மறுபடியும் வேலைய காட்டிட்டியே.! புதிய உச்சத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன.?
அடங்கப்பா.. மறுபடியும் வேலைய காட்டிட்டியே.! புதிய உச்சத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன.?
Embed widget