T20 World Cup 2022 Prize Money: T20 உலகக்கோப்பையை ஜெயிக்குறவங்களுக்கு இத்தனை கோடியா..? வாயைப் பிளக்க வைக்கும் பரிசுத்தொகை..!
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலககோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
சர்வதேச டி20 உலக கோப்பை போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் முன்னணி அணிகள் அனைத்தும் பங்கேற்க உள்ளன. டி20 உலககோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
The prize pot for the 2022 #T20WorldCup in Australia has been revealed 👀
— ICC (@ICC) September 30, 2022
Full details 👇https://t.co/Vl507PynsJ
இந்த நிலையில், டி20 உலககோப்பைக்கான பரிசுத்தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. உலககோப்பையை வெல்லும் அணிக்கு டாலர் மதிப்பில் 16 லட்சம் டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது. இரண்டாவது பரிசு வெல்லும் அணிக்கு 8 லட்சம் டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது.
சர்வதேச டி20 உலக கோப்பை போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் முன்னணி அணிகள் அனைத்தும் பங்கேற்க உள்ளன. டி20 உலககோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், டி20 உலககோப்பைக்கான பரிசுத்தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. உலககோப்பையை வெல்லும் அணிக்கு டாலர் மதிப்பில் 16 லட்சம் டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் உலககோப்பையை வெல்லும் அணிக்கு ரூபாய் 13 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. இரண்டாவது பரிசு வெல்லும் அணிக்கு 8 லட்சம் டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் 6 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 4 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ஒவ்வொரு அணிக்கும் தலா 3 கோடி வழங்கப்பட உள்ளது.
சூப்பர் 12 சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தமாக 12 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 40 ஆயிரம் டாலர் வழங்கப்பட உள்ளது. சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் 8 அணிகளுக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது. 8 அணிகள் இந்த பரிசை பெற உள்ளன.
முதல் சுற்றில் வெற்றி பெறும் 12 அணிகளுக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது. முதல் சுற்றிலே வெளியேறும் 4 அணிகளுக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது. ஐ.சி.சி. நடத்தும் இந்த டி20 உலககோப்பை போட்டியில் பங்குபெறும் அணிகளுக்கான மொத்த பரிசுத்தொகையாக 56 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது.