Hyderabad Cricket Association: மகளிர் கிரிக்கெட் அணி பேருந்தில் மது அருந்திய பயிற்சியாளர்! ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!
அணி பேருந்தில் மது அருந்தியதற்காக பெண்கள் அணி தலைமை பயிற்சியாளர் வித்யூத் ஜெய்சிம்ஹாவை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் இடைநீக்கம் செய்துள்ளது.
அணி பேருந்தில் மது அருந்திய பயிற்சியாளர்:
ஹைதராபாத் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் வித்யுத் ஜெய்சிம்ஹா. இவர் அண்மையில் கிரிக்கெட் வீராங்கனைகளுடன் தங்களது அணி பேருந்தில் பயணம் செய்தார். அப்போது பாட்டிலில் இருந்து மதுவை எடுத்து பேருந்துக்குள்ளேயே வைத்து குடித்துள்ளார். பேருந்தின் உள்ளே மது அருந்துவதை சக வீராங்கனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீராங்கனைகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்தனர்.
இடைநீக்கம் செய்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்:
இந்நிலையில், அணி பேருந்தில் மது அருந்தியதாகக் கூறி அணியின் தலைமைப் பயிற்சியாளர் வித்யுத் ஜெய்சிம்ஹாவை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் (எச்சிஏ) இடைநீக்கம் செய்துள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் ஜெகன் மோகன் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமை பயிற்சியாளரைப் பற்றிய புகார் நேற்று மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்ட நிலையில், பல்வேறு வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் உள்ளூர் செய்தி சேனல்களில் பரப்பப்பட்ட பல வீடியோக்களைக் கண்டறிந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வித்யூத் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் தடை விதிக்கப்படும்”என்று கூறப்பட்டுள்ளது
An anonymous email received on 15-02-2024 contained videos allegedly depicting Mr. Vidyuth Jaisimha, Head Coach of Senior Women's team, consuming alcohol on a team bus.
— Jagan Mohan Rao Arishnapally (@JaganMohanRaoA) February 16, 2024
Until further notice, Mr. Jaisimha is directed to refrain from HCA cricketing activities while this matter is… pic.twitter.com/4wv6nzArZd
மேலும் அந்த அறிக்கையில், “இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று விசாரித்து வருகிறோம். மகளிர் அணி எப்போது சுற்றுப்பயணம் சென்றது? அணி பேருந்தில் மது எப்படி வந்தது? யார் கொண்டு வந்தார்கள் என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது”என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் உறுதியளித்துள்ளார்.
அதேபோல்,"பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டோம்” என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, வித்யூத் ஜெய்சிம்ஹாவுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் வீராங்கனைகள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: James Anderson: கும்ப்ளேவின் மோசமான ரெக்கார்டை முறியடித்த ஆண்டர்சன்! அப்படி என்ன?
மேலும் படிக்க: Ashwin Test Wickets: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்; சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை