”பள்ளி மாணவர்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய்” வந்தது அதிரடி அறிவிப்பு..!
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதோடு தேர்வுக் கட்டணமாக 50 ரூபாயையும் சேர்த்து வரும் 09-12-2024ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க வேண்டும்.
பள்ளி மாணவ / மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என ஒரு கல்வி ஆண்டிற்கு இனி 10 ஆயிரம் ரூபாயை மாணவர்கள் சுளையாக பெற முடியும்.
10 ஆயிரம் ரூபாயை வாங்க என்ன செய்ய வேண்டும் ?
இந்த பத்தாயிரம் ரூபாயை பெற, அரசு பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணக்கர்கள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ”தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வை”எழுதி வெற்றி பெற வேண்டும்.
தேர்வு எப்போது ?
இந்த திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி அதாவது 25 – 01 – 2025ல் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
யார், யார் விண்ணப்பிக்கலாம் ?
இந்த திறனாய்வு தேர்வு எழுத, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் நடைமுறையில் உள்ள, இடஒதுக்கீட்டின் அடிப்படையில், ஆயிரம் மாணக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு (500 மாணவர்கள் / 500 மாணவிகள்), அவர்களுக்கு ஊக்கத் தொகையாக ஒரு கல்வி ஆண்டில் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். அதாவது, ஒரு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் என பத்து மாதங்களுக்கு வழங்கப்படும்
தேர்வு எப்படி நடத்தப்படும் ? எதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் ?
தமிழ்நாடு அரசின் ஒன்பது மற்றும் 10ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்கள் அடிப்படையில், தேர்வு இருதாள்களாக நடத்தப்படும். முதல் தாளில் 60 மதிப்பெண்களுக்கு கணிதம் தொடர்புடைய கேள்விகளும் இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்.
தேர்வு நேரம் எப்போது ?
இந்த தேர்வுக்கான நேரமாக முதல் தாள், காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், இரண்டாம் தாள், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி ?
இந்த தேர்வு எழுத விருப்பப்படும் மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம், வரும் 30 – 11- 2024 முதல், 09 – 12 – 2024 வரை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் கிடைக்கும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதோடு தேர்வுக் கட்டணமாக 50 ரூபாயையும் சேர்த்து வரும் 09-12-2024ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க வேண்டும்.