(Source: ECI/ABP News/ABP Majha)
Babar Azam Birthday: பிறந்த நாளை கொண்டாடிய பாபர் ஆசம்... பூங்கொத்து கொடுத்து க்யூட்டாக சர்ப்ரைஸ் செய்த ஹசன் அலி குழந்தை!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் பிறந்தநாளில் அவருக்கு ஹசன் அலியின் குழந்தை பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் இன்று தனது 29-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு பாகிஸ்தான் வீரர் ஹசன் அலியின் மகள் ஹெலினா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளர்.
நடப்பு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (அக்டோபர் 14) குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 12 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இன்று (அக்டோபர் 15) தனது 29 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
Daughter of Hassan Ali wishing a Birthday to Babar Azam 👑.#BabarAzam𓃵 | #IndiavsPak | #pakvsind | #INDvsPAK | #BabarAzampic.twitter.com/Usgg9pJQSL
— World Cup 🏏 (@WorldCup23_) October 15, 2023
சர்ப்ரைஸ் செய்த ஹசன் அலி குழந்தை:
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஹசன் அலியின் குழந்தை ஹெலினா பாபர் அசாமுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஹெலினா வாழ்த்து தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், ஹோட்டல் அறையில் இருக்கும் பாபர் அசாமுக்காக, ஹெலினா அறையின் வெளியே காத்திருக்கிறார்.
அப்போது பாபர் அசாம், ஒரு ட்ராக் ட்ரவுசர் மற்றும் பனியனுடன் வெளியே வருகிறார். உடனே... அந்த குழந்தை தன் கையில் இருந்த பூங்கொத்தை அவரிடம் கொடுத்து விட்டு க்யூட் ஆகா ஓடுகிறது. அதை பார்த்து பாபர் அசாம் என்ன இது ? என்று கேட்க அந்த குழந்தை அவர் அருகில் சென்று அவரை கட்டி அணைத்துகொள்வது போல் முடிகிறது அந்த வீடியோ.
முன்னதாக பாபர் ஆசாம் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாபர் ஆசாம் புள்ளிவிவரங்கள்
கடந்த மே 31, 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதேபோல், டி 20 போட்டியில் செப்டம்பர் 7, 2016 ஆம் ஆண்டு அறிமுகமான இவர், டெஸ்ட் போட்டியிலும் அதே ஆண்டு தான் அறிமுகமானார்.
111 ஒரு நாள் போட்டிகள் விளையாடி உள்ள பாபர் அசாம், 7.02 சராசரி மற்றும் 88.86 ஸ்ட்ரைக் உடன் 5474 ரன்கள் எடுத்துள்ளார். 104 டி20 போட்டிகள் விளையாடி உள்ள இவர் 28.40 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 41.48 சராசரியுடன் 3485 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் அதிகபட்ச ரன்கள் 158.
49 டெஸ்ட் போட்டிகளில் 88 இன்னிங்ஸ்களில் 47.74 சராசரியுடன் மொத்தம் 3772 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 19 சதங்கள் மற்றும் 29 அரை சதங்கள் அடித்துள்ளார். பாபர் அசாம் தற்போது ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர்-1 பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: World Cup 2023: இந்தியா பாகிஸ்தான் போட்டி... பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்! வீடியோ!
மேலும் படிக்க: ENG Vs AFG Innings Highlights: குர்பாஸ், இக்ரம் அபாரம்..! இங்கிலாந்தை துவம்சம் செய்த ஆப்கானிஸ்தான் - 285 ரன்கள் இலக்கு!