Happy Birthday Virender Sehwag:இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்; சேவாக் செய்த ஐந்து சம்பவங்கள்! என்ன?
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் பிறந்த நாள் இன்று. அந்தவகையில் வீரேந்திர சேவாக்கின் 5 சிறந்த ஆட்டங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களில் தனக்கென அழியா புகழும், மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புயலாகவும் களத்தில் இருந்த வீரேந்திர சேவாக்கின் பிறந்த நாள் இன்று. அந்த வகையில் வீரேந்திர சேவாக்கின் 5 சிறந்த ஆட்டங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம்:
20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் சதம் அடித்து, கிரிக்கெட் உலகில் புயலை கிளப்பியவர் வீரேந்திர சேவாக். அந்த இன்னிங்ஸில் 39 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை பதிவு செய்தார். அந்த நேரத்தில், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இந்தியரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை முறியடித்தார், அதே நேரத்தில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற உதவினார்.
தென்னாப்பிரிக்காவை அலறவிட்டவர்:
2008 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மற்றொரு அற்புதமான ஆட்டத்தின் மூலம் வீரேந்திர சேவாக் தனது டெஸ்ட் சாதனையை முறியடித்தார். அந்த ஆட்டத்தில் 319 ரன்கள் எடுத்தார், இறுதியில் போட்டி டிராவில் முடிந்தது. அந்த இன்னிங்ஸில் சேவாக் 42 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்தார்.
201 vs இலங்கை, 2008:
வீரேந்திர சேவாக்கின் முக்கியாமன டெஸ்ட் நாக்களில் ஒன்று ஆகஸ்ட் 2008 இல் காலேயில் நடைபெற்ற போட்டி. நட்சத்திர வீரர்கள் நிறைந்த இலங்கை அணிக்கு எதிராகப் போட்டியிட்ட சேவாக் முதல் இன்னிங்ஸில் 201 ரன்களை குவித்தார். அதிரடியாக விளையாடிய அவர் 22 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசினார். அவரது ஆட்டத்தால் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
219 vs வெஸ்ட் இண்டீஸ், 2011:
வீரேந்திர சேவாக் டெஸ்ட் போட்டி மட்டும் இன்றி ஒரு நாள் போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் கடந்த 2011 ஆம்ஆண்டு இந்தூரில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 149 பந்துகளில் 219 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் அவர் 25 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசினார்.
122 vs சென்னை சூப்பர் கிங்ஸ், 2014:
10 ஆண்டுகளுக்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) இன் இன்னிங்ஸைத் தொடங்கிய வீரேந்திர சேவாக் ஐபிஎல் நாக் அவுட் கட்டத்தில் இதுவரை இல்லாத சிறந்த நாக்களில் ஒன்றில் விளையாடினார். அந்த போட்டியில் 58 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 122 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணிக்கு 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார் சேவாக்.