Virat Kohli: உலகக் கோப்பையில் விராட் கோலி.. ஐந்து முக்கியமான போட்டிகள்...இதோ!
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி இன்று (நவம்பர் 5) தன்னுடைய 35 வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். இச்சூழலில், ஐசிசி உலகக் கோப்பையின் அனைத்து வயதினருக்குமான போட்டிகளில் அவர் விளையாடிய ஐந்து முக்கியமான போட்டிகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
2008-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை:
கடந்த 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. மார்ச் 2-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் (Duckworth–Lewis–Stern method) இந்திய அணி வெற்றி பெற்றது.
இதில், 45. 4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றார் விராட் கோலி.
2011 உலகக் கோப்பை:
விராட் கோலி 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானதால் அவருடைய முதல் சர்வதேச ஒரு உலகக் கோப்பை தொடரை கடந்த 2011-ஆம் ஆண்டு விளையாடினார். தன்னுடைய அறிமுக உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 282 ரன்களை குவித்தார். சச்சின் டெண்டுல்கர் விளையாடிய கடைசி உலகக் கோப்பை தொடரான இதில் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
2015-ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக செஞ்சுரி:
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடிய அனுபவத்துடன், கடந்த 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக்கோப்பை போட்டியில், அந்த அணிக்கு எதிரான இரண்டாவது சதத்தை பதிவு செய்தார் கோலி. அதன்படி , அந்த போட்டியில், அதிகபட்சமாக 107 ரன்களை குவித்தார் கோலி.
2019-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்ட நாயகன்:
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர் கொண்டது இந்திய அணி. இந்த போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி 72 ரன்கள் குவித்து ஆட்டநாயகான தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2023 உலகக் கோப்பை தொடர்:
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தன்னுடைய சுவாரஸ்யமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் 85 ரன்கள், வங்கதேச அணிக்கு எதிராக சதம் என இந்த தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார் விராட் கோலி.
மேலும் படிக்க: AUS vs ENG: நடையை கட்டிய நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து! அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஆஸ்திரேலியா!
மேலும் படிக்க: PAK vs NZ: நியூசிலாந்துக்கு வில்லனான மழை! பகர் ஜமானின் மிரட்டல் பேட்டிங்கால் பாகிஸ்தான் வெற்றி!