HBD Sachin: நீ பேசாத..இந்த வாழைப்பழத்தை சாப்பிடு.. சச்சின் சொன்ன விஷயம்.. வாழ்த்து சொன்ன சேவாக்..
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு முன்னாள் வீரர் சேவாக் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் டான் பிராட்மேனிற்கு பிறகு அனைவராலும் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகின் கடவுள் என்று ரசிகர்கள் இவரை அழைத்தனர். ஏனென்றால் களத்தில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகள் அவ்வளவு உள்ளன. 16 வயதில் ஒரு சிறுவன் கிரிக்கெட் ஆட வந்திருக்கிறான் என்று கூறப்பட்ட நிலையில், அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் உலகை ஆட்டி படைத்தார். கிரிக்கெட் உலகில் அவருடைய சாதனை பலவற்றை அடுத்து யார் முறியடிப்பார்கள் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. இன்று அவர் தன்னுடைய 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ஒரு வாழ்த்து பதிவை செய்துள்ளார். அதில், “சச்சின் பாஜி நீங்கள் போட்டிகளின் போது என்னை எப்போதும் பேசாமல் இருக்க சொன்னீர்கள். ரன் அடித்தாலும் அடிக்காவிட்டாலும் பேசாமல் இருக்க சொன்னீர்கள். நான் பேசாமல் இருக்க நீங்கள் வாழைப்பழத்தை கொடுத்து என்னை சாப்பிட வைத்து அமைதியாக இருக்க வைப்பீர்கள். ஆகவே உங்களுடைய பிறந்தநாள் அன்று நான் அதிகம் பேசாமல் இந்த வாழைப்பழத்தை சாப்பிடுகிறேன்” எனக் கூறி வீடியோ பதிவுடன் தன்னுடைய பிறந்தாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
Birthday greetings to the great man @sachin_rt Paaji.
— Virender Sehwag (@virendersehwag) April 24, 2022
Aur Aapke janamdin par yeh tohfa humne apne aap ko diya hai 😛 #HappyBirthdaySachin pic.twitter.com/knsIJ9Do2H
அவரின் இந்த வாழ்த்து பலரையும் நெகிழவைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்