Ask Sachin: கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு மிகவும் பிடிச்ச மைதானம் எது தெரியுமா..? மகிழ்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்..!
மும்பை வான்கடே மைதானத்திற்கு அடுத்ததாக பிடித்த மைதானம் எது என்று ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு சென்னை சேப்பாக்கம் என்று சச்சின் டெண்டுல்கர் பதில் அளித்துள்ளார்.
உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானாக இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். #AskSachin என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டு, அதன்கீழ் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சச்சின் ட்விட்டரில் பதில் அளித்து வருகிறார். அப்போது, அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு, வெளிப்படையான பதில்களை அளித்து சச்சின் அசத்தி வருகிறார்.
சேப்பாக்கம்:
அந்த வகையில், மும்பை வான்கடே மைதானத்திற்கு அடுத்ததாக பிடித்த மைதானம் எது? என்று ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு சென்னை சேப்பாக்கம் என்று சச்சின் டெண்டுல்கர் பதில் அளித்துள்ளார். இந்த பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இது, சென்னை மக்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்து சென்றுள்ளது.
தொடர்ந்து கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவர், தோனியைப் பற்றி ஒருவார்த்தை சொல்லுங்களேன் என்று கேட்க, அதற்கு எம்.எஸ். என்றுதான் நான் தோனியை எப்போதும் அழைப்பதாக கூறியுள்ளார் சச்சின்.
சூர்யாவுடன் சந்திப்பு:
சூர்யாவுடன் சச்சின் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ரசிகர் ஒருவர் இந்த சந்திப்பு குறித்து சொல்லுங்களேன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சச்சின், ‘முதலில் நாங்கள் சந்தித்தபோது இருவரும் கூச்ச சுபாவத்துடன் இருந்தோம். இருவரும் மற்றவருக்கு ஆரம்பத்தில் எந்த தொந்தரவு கொடுக்கவில்லை. பின்னர் சூர்யாவுடன் நீண்ட நேரம் பேசினேன். நல்ல உரையாடலாக இந்த சந்திப்பு இருந்தது.’ என்று கூறியுள்ளார்.
மிகவும் பிடித்த கால்பந்து வீரர் யார் என்ற கேள்விக்கு, மெஸ்ஸியின் பெயரை சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். அதேபோல் மிகவும் பிடித்த உணவு எது? என்ற கேள்விக்கு, பிரியாணி என பதில் . அதேபோல் வீட்டில் யாருடைய ஆட்சி நடக்கும் என்ற கேள்விக்கு, வழக்கம் போல் தனது மனைவியான அஞ்சலியின் பெயர் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜூன் பற்றி பேசவேண்டாம்:
ரசிகர் ஒருவர் எப்போதாவது அர்ஜுன் டெண்டுல்கர் உங்கள் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறாரா? என்று வந்த கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் பதில் அளித்துள்ளார். அதில், ஆம், ஒருமுறை அர்ஜுன் டெண்டுல்கர் என் விக்கெட்டை லார்ட்ஸ் மைதானத்தில் வீழ்த்தி இருக்கிறார். ஆனால் இப்போது அர்ஜுன் பற்றி பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரையில், சச்சினுக்கு எப்போதும் ஸ்பெஷலாக இருந்துள்ளது. சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐந்து டெஸ்ட் சதங்களை அடித்துள்ள சச்சினின் சராசரி 88.18 ஆகும். அதில், நான்கு போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.
மேலும் படிக்க: CSK vs SRH, IPL 2023 Live: சேப்பாக்கத்தில் வெற்றி பாதைக்குகு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்; டாஸ் வென்று பந்து வீச முடிவு..!