Watch Video: இதே நாளில்தான் ஓய்வு... பைக் ஓட்ட எனக்கு ஏது ஓய்வு..? ஜாலியாக பைக்கில் வலம்வந்த எம்.எஸ்.தோனி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி பைக் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது அதிகளவில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி பைக் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது அதிகளவில் வைரலாகி வருகிறது.
மகேந்திர சிங் தோனிக்கு பைக் மற்றும் கார் மீதுள்ள காதல் நம் அனைவருக்கும் தெரிந்ததே. விண்டேஜ் முதல் அனைத்து வகையாக பைக்குகளையும் அவர் தனியாக ஒரு வீடு கட்டி அதில் நூற்றுக்கு மேற்பட்ட பைக் மற்றும் கார்களை அடுக்கி வைத்துள்ளார். சமீபத்தில் தோனி பைக் கலெக்ஷன் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி வைரலானது. அந்த வகையில், தற்போது எம்.எஸ். தோனி பைக் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ராஞ்சியில் ஹோண்டா ரெப்சோல் 150 என்ற மோட்டார் பைக்கை தோனி ஓட்டி சென்று, தனது பண்ணை வீட்டின் மிகப்பெரிய கதவு வழியாக உள்ளே செல்கிறார். அந்த வீடியோவின் மீது ராஞ்சியில் தோனி பைக் ஓட்டி செல்கிறார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
View this post on Instagram
எளிமைக்கு பெயர்போன எம்.எஸ்.தோனி:
மகேந்திர சிங் தோனி எளிமைக்கு பெயர் போனவர். சமீபத்தில், காருக்கு இருந்து தோனி சாமானியர் ஒருவரிடம் வழிகேட்ட வீடியோ வைரலானது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சர்வதேச போட்டிகளில் ஓய்வு:
2004 ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான எம்.எஸ். தோனி, கடைசியாக நடந்த 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியுடன் தனது சர்வதேச பயணத்தை முடித்துக்கொண்டார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தோனி தேர்வானபோதும் தனது சொந்த விருப்பத்தின்பேரில் தொடரில் இருந்து விலகினார்.
View this post on Instagram
அதன்பிறகு, யாரும் எதிர்பார்க்காத வேளையாக கடந்த 2020 ஆகஸ்ட் 15 ம் தேதி இரவு சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு பெறும்போது அவருக்கு மிகப்பெரிய கெளரவம் கிடைக்க வேண்டும் என்று இன்றுவரை ரசிகர்கள் நினைத்து வருகின்றனர்.
ரசிகர்கள் மனதை நன்றாக அறிந்துகொண்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறும்போது எனது கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இருக்கும் என்று தெரிவித்தார். கடந்த ஐபிஎல் 16வது சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.