Watch Video: உதட்டை கொண்டு எகிறி வந்த பந்தை பிடித்த அலெக்ஸ் கேரி.. மீண்டும் ஒரு பரபரப்பு கேட்சால் வைரல்..!
இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் கேட்சை பிடிக்க அலெக்ஸ் கேரி தனது உதடுகளை பயன்படுத்தியது வீடியோவில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் 2023 தொடரைன் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 6 அன்று ஹெடிங்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, தொடக்க வீரராக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். மதிய உணவு வரை இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதன் போது ஸ்டூவர்ட் பிராட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காமித்தார்.
தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்கள் வரிசையாக சரிய, முதல் நாள் ஆட்டத்தின் கடைசி அமர்வில், மிட்செல் மார்ஷின் அற்புதமான 118 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி 18 ரன்கள் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பேட் கம்மின்ஸின் பந்தில் கட் ஆஃப் ஆடும் முயற்சியில் கேரியிடம் கேட்ச் கொடுத்து பென் டக்கெட் வெளியேறினார்.
Morgan 🤣#ashes pic.twitter.com/8AyqpFSkWK
— mon (@4sacinom) July 6, 2023
இந்த கேட்சின் மூலம் அலெக்ஸ் கேரி மீண்டும் ஒரு பரபரப்பான பேசுபொருளுக்கு ஆளானார். இந்த கேட்சை பிடிக்க அலெக்ஸ் கேரி தனது உதடுகளை பயன்படுத்தியது வீடியோவில் தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில், டக்கெட்டின் பேட்டில் பட்ட பந்தானது மேல் நோக்கி நகர்ந்தது. அப்போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கேட்ச்சைப் பிடிக்க குதித்தார். அப்போது சமநிலை இழந்த கேரி ஒரு வழியாக கேட்சை பிடிக்க, பந்தானது கிளவுசுகளில் பட்டு எகிற தொடங்கியது.
சமார்த்தியமாக யோசித்த அலெக்ஸ் கேரி தனது உதடுகளை பயன்படுத்தி பந்தை முகத்தோடு அழுத்தி கொண்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் அதிவேகமாக வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118 ரன்கள் எடுக்க, இவருக்கு அடுத்தபடியாக ஹெட் 39 ரன்கள் எடுத்திருந்தார்.
தற்போது பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் ஜாக் கார்லி 33 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜோ ரூட் 19 ரன்களுடனும், ஜான் பேர்ஸ்டோவ் 1 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
சர்ச்சைக்குள்ளனா 2வது டெஸ்ட்டின் பேர்ஸ்டோவ் விக்கெட்:
Once a cheater, always a cheater. Johny bairstow clearly leaved that ball then how could Australia even appeal run out ??. #Ashes23 #ENGvsAUS #AUSvsENGpic.twitter.com/sodRbHD5XY
— Ritika Malhotra 🇮🇳 (@FanGirlRohit45) July 2, 2023
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே லார்ட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்க செய்த விதம்தான் இன்றளவு பேசப்பட்டு வருகிறது.