First Woman coach in Men's cricket: வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு பெண் பயிற்சியாளர்: யார் இந்த சாரா டெய்லர்?
மகளிர் கிரிக்கெட்டில், சிறந்த வீராங்கனையாக அடையாளம் காணப்பட்ட சாரா டெய்லர், மின்னல் வேக விக்கெட் கீப்பிங்கிற்காக பெரிதும் கொண்டாடப்பட்டவர்
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டரான சாரா டெய்லர், அபு தாபி ஆண்கள் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில், ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படும் முதல் பெண் கிரிக்கெட்டர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார் சாரா டெய்லர்.
மகளிர் கிரிக்கெட்டில், சிறந்த வீராங்கனையாக அடையாளம் காணப்பட்ட சாரா டெய்லர், மின்னல் வேக விக்கெட் கீப்பிங்கிற்காக பெரிதும் கொண்டாடப்பட்டவர். அவரது கரியரில், ”இந்த 2018-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆண்கள், பெண்கள் கிரிக்கெட்டின் தலைச்சிறந்த விக்கெட் கீப்பர் சாராதான்” என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டால் பாராட்டப்பட்டவர். இப்போது 32 வயதான சாரா, 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பயிற்சியாளராக சாரா:
ஏற்கனவே சஸ்ஸெக்ஸ் அணியின் சிறப்பு பயிற்சியாளராக பணியாற்றி வரும் சாரா, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி-10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அபு தாபி அணிக்கு துணை பயிற்சியாளராக பதவி அளிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமை பயிற்சியாளர் பால் ஃபார்பிரேஸுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
டி-10 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் கிரிக்கெட் லீக் தொடராகும். 7 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 10 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு முதல் அபு தாபி அணி புதிதாக சேர்க்கப்பட உள்ளது. அபு தாபி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருக்கும் இந்த கிரிக்கெட் தொடர் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.
History maker! 🤩
— Team Abu Dhabi Cricket (@TeamADCricket) October 29, 2021
We’re proud to announce @Sarah_Taylor30 as our assistant coach for Season 5 of the #AbuDhabiT10! 👏
She becomes the FIRST female coach in Men’s professional franchise cricket! 🙌#TeamAbuDhabi #InAbuDhabi pic.twitter.com/0Os5i0yb2V
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்