ENG Vs PAK LIVE Score: பாகிஸ்தானை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து
ENG Vs PAK LIVE Updates: இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE
Background
உலகக் கோப்பை 2023ன் 44வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.
முன்னதாக, கடைசி இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி கடந்த போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் காரணமாக, 10வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியது. இதற்கிடையில், அரையிறுதியில் இடம்பிடிப்பதற்காக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்று மாபெரும் ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.
அரையிறுதிக்கு தகுதிபெற பாகிஸ்தான் என்ன செய்யவேண்டும்..?
நியூசிலாந்தைத் தாண்டி புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் முன்னேறி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால், முதலில் பேட் செய்தால் 287 அல்லது 288 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். முதலில் பந்துவீசினால், பாகிஸ்தான் 284 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை துரத்த வேண்டும்.
இங்கிலாந்து vs பாகிஸ்தான் உலகக் கோப்பை 2023 போட்டி விவரங்கள்:
நாள்: சனிக்கிழமை (நவம்பர் 11)
நேரம் : மதியம் 02:00 மணி
இடம் : ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
லைவ் ஸ்ட்ரீமிங் ஆப்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
இங்கிலாந்து:
ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), எம்.எம். அலி, எச்.சி. புரூக், எஸ்.எம். குர்ரான், எல்.எஸ். லிவிங்ஸ்டோன், டி.ஜே. மலன், ஏ.யு. ரஷித், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஏ.டி. ஹேல்ஸ்
பாகிஸ்தான்:
பாபர் அசாம் (கேப்டன்), SH கான், ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம், நசீம் ஷா, எஸ் அப்ரிடி, ஷான் மசூத், முகமது ஹாரிஸ்
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று 92வது முறையாக ஒருநாள் போட்டியில் நேருக்குநேர் மோதுகின்றன. கடந்த 91 போட்டிகளில் இங்கிலாந்து 56 முறையும், பாகிஸ்தான் 32 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் மட்டுமே முடிவு இல்லாமல் முடிவடைந்துள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 5 ஆட்டங்களில் இங்கிலாந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 27 முறையும், சேஸிங்கில் 29 முறையும், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்த போது 15 முறையும், சேஸிங் செய்த போது 17 முறையும் வென்றுள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இரு நாடுகளும் இதுவரை பத்து முறை நேருக்குநேர் சந்தித்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் 5-4 என்ற சாதனையுடன் முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி முடிவு இல்லாமல் முடிந்தது. கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பிட்ச் அறிக்கை:
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே உள்ளது. இருப்பினும், ஆட்டத்தின் கடைசி கட்டத்தில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பனியின் காரணமாக சாதகமாக மாறலாம். முதல் பாதியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பிட்சை கணித்து சரியாக செயல்பட்டால் விக்கெட் வேட்டையில் ஈடுபடலாம்.
மழைக்கு வாய்ப்பா..?
கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை. மேக மூட்டம் ஒரு சதவீதமாகவும், ஈரப்பதம் 46 சதவீதமாகவும் இருக்கும். மேலும், வெப்பநிலை 21 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENG Vs PAK LIVE Score: ஆட்ட நாயகன்
இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இவர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ENG Vs PAK LIVE Score: இங்கிலாந்து வெற்றி
பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டினைட்யும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி ரன்கள் 93 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 9 லீக் போட்டிகளில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
ENG Vs PAK LIVE Score: 244 ரன்கள் எட்டிய பாகிஸ்தான்
43 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ENG Vs PAK LIVE Score: 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்
அதிரடியாக விளையாடி வரும் ஹாரீஸ் ராஃப் மற்றும் வாசிம் கூட்டணி 31 பந்தில் அரைசதம் எட்டியுள்ளது.
ENG Vs PAK LIVE Score: சிக்ஸர்கள் விளாசும் ஹாரீஸ் - வசீம் கூட்டணி
41வது ஓவரின் முதல் பந்தில் ஒரு பவுண்டரியும் கடைசி பந்தில் ஒரு சிக்ஸரும் விளாசினார் முகமது வசிம். 41 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் சேர்த்துள்ளது.