ENG vs AUS Ashes: 147-க்கு சுருண்ட இங்கிலாந்து... கண்ணீராய் கொட்டித் தீர்த்த மழை!
இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம், ஆஷஸ் தொடரில் 5 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் இரண்டாவது ஆஸ்திரேலிய அணி கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் பேட் கம்மின்ஸ்.
ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 2021-22ம் ஆண்டிற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கி இருக்கிறது. இந்த தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாங்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால், 50.1 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை, கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், மிட்சல் ஸ்டார்க், ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளும், கேமரான் க்ரீன் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கின்றனர்.
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் முடிந்த பிறகு, இடைவெளி அளிக்கப்பட்டது. அப்போது மழை குறுக்கிட்டதால், மீண்டும் போட்டி தொடங்கப்படாமல் இருக்கின்றது. முதல் நாள் ஆட்டம் முடிய இன்னும் நேரம் இருப்பதால், மழை நின்றவுடன் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கும் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது.
What a start for Pat Cummins as Test skipper, he finishes with a five-wicket haul as England are bowled out for 147 💥
— ICC (@ICC) December 8, 2021
Watch the #Ashes on https://t.co/MHHfZPQi6H (in selected regions)!#WTC23 | #AUSvENG | https://t.co/pR2hqnzR22 pic.twitter.com/YmWQzyJKaO
இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம், ஆஷஸ் தொடரில் 5 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் இரண்டாவது ஆஸ்திரேலிய அணி கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். முன்னதாக, 1962-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டியில் அப்போதைய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிச்சி பெனாட் 6 விக்கெட்டுகள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு ரெக்கார்ட்:
முன்னதாக, முதல் இன்னிங்ஸின்போது ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் ஓப்பனிங் களமிறங்கினர். முதல் இன்னிங்ஸின் முதல் ஓவரை மிட்சல் ஸ்டார்க் வீசினார். அவர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே க்ளீன் பவுல்டாகி டக்-அவுட்டாகி வெளியேறினார் பர்ன்ஸ்.
140 ஆண்டுகால ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வரலாற்றில், 85 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் டெஸ்ட் போட்டி தொடங்கிய முதல் இன்னிங்ஸின் முதல் பந்தில் விக்கெட் விழுந்திருக்கிறது. இதனால், வரலாற்று பக்கங்களில் ஸ்டார்க் இடம் பிடித்திருக்கிறார். முன்னதாக, 1936-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் எர்னி மெக்கார்மிக் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில், ஸ்டான் வர்த்திங்டன், பெர்ட் ஓல்ட் ஃபீல்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். அந்த ரெக்கார்டு இப்போது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிப்பீட் ஆகியிருக்கிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்