IND vs PAK: ஏமாற்றிய தினேஷ்..! காப்பாற்றிய அஸ்வின்..! பாகிஸ்தானிடம் மாஸ் காட்டிய தமிழன்..!
தினேஷ் கார்த்தி அவுட் ஆகிய நிலையில், பரபரப்பான கட்டத்தில் களமிறங்கிய அஸ்வின் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. உலக கோப்பை டி20 தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி டாஸை வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. நசீம் ஷா வீசிய ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் போல்டு ஆனார். 2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 7 ரன்கள் எடுத்திருந்தது.
10 ஓவர்கள் முடிவில் இந்தியா
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ஓவர்கள் முடிவில், விராட் கோலியும், ஹார்திக் பாண்டியாவும் களத்தில் இருந்த நிலையில் இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா கடைசி நிமிட பதற்றத்துடன் விளையாடியது.
பரபரப்பான கடைசி ஓவர்
முதல் பந்து: கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், நவாஸ் வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்த பாண்டியா, பாபர் ஆஸாமிடம் கேட்ச் ஆகி விக்கெட்டானார்.
இரண்டாவது பந்து: அதையடுத்து தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கினார். அப்போது 5 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் 1 ரன் எடுத்தார்.
மூன்றாவது பந்து: 2 ரன்கள் எடுத்தார்
நான்காவது பந்து:
* 3 பந்துகளில் 13 ரன்கள் தேவைபட்ட நிலையில், 4 ஆவது பந்தை சிக்ஸருக்கு கோலி விளாசி, இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இதனிடையே நோபால் என போட்டி நடுவர் அறிவித்தார். இது இந்திய ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதனால், பாகிஸ்தான் வீரர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. நடுவரிடம் முறையிட்டனர். எனினும், நோ பால் என்று போட்டி நடுவர் உறுதிப்படுத்தினார்.
* ஃப்ரி ஹிட் பந்தை எதிர்கொண்ட கோலி போல்டானார், ஆனால் அந்த பந்தில் 3 ரன்கள் ஓடி எடுத்தனர். அதையடுத்து, எதிர்பாராதவிதமாக தினேஷ் கார்த்திக் ஸ்டம்ப்பிங்கில் ஆட்டமிழந்தார்.
ஐந்தாவது பந்து: 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்தி ஸ்டம்ப்பிங்கானார்.
கடைசி பந்து: இதையடுத்து, அஸ்வின் களமிறங்கினார். கடைசி பந்து வொய்டாக மாறியதால், ஒரு ரன்கள் கிடைத்தது. இதையடுத்து, ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது.
இதையடுத்து, கடைசியாக வீசப்பட்ட பந்தில், நவாஸ் வீசிய பந்தை நேராக அடித்து, ஒரு ரன் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு அஸ்வின் வழி வகுத்தார்.
இந்திய அணியில் விராட் கோலி சிறப்பாக ஆடி, 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு கூட்டிச் சென்றார்.