மேலும் அறிய

Dhoni Birthday Special: தோனியும் சென்னையும்.. நீங்காத அன்பும் பாசமும் - ஹேப்பி பர்த் டே தல தோனி !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தன்னுடைய 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தன்னுடைய 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் சிறந்த கேப்டன்களில் இவரும் ஒருவர். கபில்தேவிற்கு பிறகு இந்தியாவிற்கு உலகக் கோப்பையை பெற்று தந்தவர் என்பதில் கூடுதல் சிறப்பு மிக்க ஒன்று. 

கிரிக்கெட் களத்தில் தோனி களமிறங்கும் போது ரசிகர்கள் பட்டாளம் தோனி, தோனி என்று ஆரவாரம் செய்து இவரை வரவேற்பார்கள். அடர்ந்த முடியுடன் அதிரடியாக ஆட தொடங்கிய தோனி பின்னர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து சமார்த்தியமாக விளையாட தொடங்கினார். கிரிக்கெட் விளையாட்டில் மிகச் சிறந்த ஃபினிசராக வலம் வந்து அசத்தினார்.

சென்னையும் தோனியும்:

மகேந்திர சிங் தோனிக்கும் சென்னைக்கும் எப்போதும் சிறந்த பந்தம் ஒன்று உள்ளது. சென்னை ஆடுகளம் எப்போதும் தோனியாக ராசியான ஒன்றாகவே அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியில் தோனி விளையாடி வருகிறார். இவருக்கு சென்னையில் எப்போதும் உற்சாக வரவேற்பு இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தோனிக்கு சென்னையை மிகவும் பிடிக்க காரணம் என்ன?

சென்னை வரும்போது எல்லாம் தோனி ஒரு பைக் எடுத்து கொண்டு சென்னை சுற்றி பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையிலுள்ள பல்வேறு இடங்களுக்கு பைக் மூலம் சுற்றி பார்த்துள்ளதாக தெரிகிறது .அப்போது முதல் அவருக்கு சென்னை மீது மிகுந்த காதல் ஏற்பட்டுள்ளது. அது தான் அவருக்கு நாளடைவில் சென்னை மிகவும் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

Dhoni Birthday Special: தோனியும் சென்னையும்.. நீங்காத அன்பும் பாசமும் - ஹேப்பி பர்த் டே தல தோனி !

2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோனி இரட்டை சதம் விளாசி அசத்தினார். அதுவும் அவருக்கு சென்னையில் தான் நடந்தது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானம் அவருக்கு ஒரு உள்ளூர் ஆடுகளம் போல் மாறியது. சென்னைக்கு எப்போதும் எல்லாம் தோனி வருகிறாரோ அப்போது அவருடைய ரசிகர்கள் பெரிய திருவிழா தான். அவர் கிரிக்கெட் விளையாட்டிற்காகவோ அல்லது படப்பிடிப்பிற்கோ அல்லது நிகழ்ச்சிக்காவோ வந்தால் அது ரசிகர்கள் கொண்டாட்டமாகவே அமைந்திருக்கும். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமிண்ட்ஸ் விழாவில் தோனி பங்கேற்று இருந்தார். அதில் அவர் என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று கூறினார். மேலும் அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் தீர்மானிப்பாதகவும் தெரிவித்திருந்தார். தோனி களத்தில் மட்டுமல்லாமல் ஓய்வு அறிவிப்பதிலும் தனக்கு என்று ஒரு தனி பாணியை வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவில் திடீரென்று ஓய்வை அறிவித்தார். அதேபோல் ஒருநாள் போட்டிகளிலிருந்து திடீரென்று கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வை அறிவித்தார். அந்த வகையில் தற்போது ஐபிஎல் போட்டியிலும் அவர் அதே பாணியை கடைப்பிடிப்பார் என்று கருதப்படுகிறது. தோனி என்பவர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். அவருடைய சகாப்தம் ஒரு முடிவு அல்ல அது பல புதிய சகாப்தங்களின் தொடக்கமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தல தோனி...!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget