வரலாற்று சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனை - தீப்தி சர்மாவுக்கு குவியும் பாராட்டு!
தென்னாப்பிரிக்காவின் சுனே லூஸுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது பெண் பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முறை ஆறு விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவைச் சேர்ந்த தீப்தி சர்மா படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் சுனே லூஸுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது பெண் பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேற்கிந்திய தீவுகள் பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது.
1⃣0⃣Overs
— BCCI Women (@BCCIWomen) December 27, 2024
3⃣ Maidens
3⃣1⃣ Runs
6⃣ Wickets
That was one impressive performance from Deepti Sharma! 🙌 🙌
Drop an emoji in the comments below to describe that display 🔽
Updates ▶️ https://t.co/SKsWib5uuE#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/nvaIr8Pjfi
இதையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வந்தோதராவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து அறிவித்தது. இதையடுத்து இந்திய அணி பவுலிங் செய்ய கிரவுண்டுக்கு சென்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கியாஅனா ஜோசப் மற்றும் ஹேலி மேத்யூஸ் களம் கண்டனர். இருவருமே ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். இதையடுத்து வந்த டியாண்ட்ராவும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். ஷெமைன் காம்பெல்லே மற்றும் சினெல்லே ஹென்றி ஆகியோர் சற்று நிதனமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
சினெல்லே 61 ரன்களிலும் ஹெமைன் 46 ரன்களிலும் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவுகள் அணி கடும் சிரமத்தை எதிர்கொண்டது.
இறுதியில் 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் மேற்கிந்திய தீவுகள் அணி 162 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில், தீப்தி ச்ர்மா 6 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங் 4 விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 10 ஓவர்களில் வெறும் 31 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் போட்டியில் தனது மூன்றாவது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த முயற்சியின் மூலம், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஏக்தா பிஷ்டின் சாதனையை முறியடித்து, இந்தியாவுக்காக அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் ஆனார்.
உண்மையில், அவர் ஜூலன் கோஸ்வாமி மற்றும் நீது டேவிட் மற்றும் பிஷ்ட் ஆகியோரை முந்தினார். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்கள் ஒருநாள் போட்டியில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முறை ஆறு விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவைச் சேர்ந்த தீப்தி சர்மா படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் சுனே லூஸுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது பெண் பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தீப்தி தற்போது 98 ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தீப்தி தனது பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஷெமைன் கேம்பல், சினெல்லே ஹென்றி, ஜைடா ஜேம்ஸ், ஆலியா ஆலினே, அஃபி பிளெட்சர் மற்றும் ஆஷ்மினி முனிசார் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.