David Miller Century: தனி ஆளாக தென்னாப்பிரிக்காவை தாங்கிப்பிடித்த டேவிட் மில்லர்... அதிரடி சதம் விளாசி அசத்தல்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அதிரடியாக சதம் விளாசினார்.
![David Miller Century: தனி ஆளாக தென்னாப்பிரிக்காவை தாங்கிப்பிடித்த டேவிட் மில்லர்... அதிரடி சதம் விளாசி அசத்தல்! David Miller Hits Century With 8 Four 5 Six South Africa vs Australia Semi Final ODI World Cup 2023 David Miller Century: தனி ஆளாக தென்னாப்பிரிக்காவை தாங்கிப்பிடித்த டேவிட் மில்லர்... அதிரடி சதம் விளாசி அசத்தல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/16/bb7a3c11fb8d7f743b7699963d4f858f1700139759417572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பையில் இன்று (நவம்பர் 16) இரண்டாவது அரையிறுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.
இதனிடயே, நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி சுற்றில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். காரணம், இன்றைய போட்டியில், வெற்றி அடையும் அணி இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பதே.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா:
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் தேம்பா பாவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் தேம்பா பாவுமா ஆகியோர் களமிறங்கினர். ஆனால், அவர்கள அந்த அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தனர். 4 பந்துகள் களத்தில் நின்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தேம்பா பாவுமா ரன் ஏதும் இன்றி விக்கெட்டை பறிகொடுத்தார்
அதேபோல், குயின்டன் டி காக் 14 பந்துகள் களத்தில் நின்று 3 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார். இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்ததால் பின்னர் வரும் வீரர்கள் நிதானமாக விளையாடி தென்னாப்பிரிக்க அணிக்கு ரன்களை சேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்த சூழலில், களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகியோரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
இவ்வாறாக 11.5 ஓவர்கள் முடிவிலேயே முக்கியமான 4 விக்கெட்டுகளையும் இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து தென்னாப்பிரிக்க அணி திணறியது.
இந்த நான்கு விக்கெட்டுகளில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய தென்னாப்பிரிக்க அணிக்கு நிதனமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர் ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி. 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதனமாக விளையாடி ரன்களை எடுத்தனர். அப்போது இந்த ஜோடியை 30.4 வது ஓவரில் பிரித்தார் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் டிராவிஸ் ஹெட்.
அதிரடி சதம் விளாசிய மில்லர்:
விக்கெட்டுகளை இழந்து திணறிய தென்னாப்பிரிக்க அணியை தன்னுடைய அதிர ஆட்டத்தால் மீட்டார் டேவிட் மில்லர். அதன்படி, 5 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 8 பவுண்டரிகளை விளாசினார். மொத்தம் 116 பந்துகள் களத்தில் நின்ற அவர் 101 ரன்களை குவித்தார்.
பின்னர், பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்தார். 24 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க அணி இழந்த தருணத்தில் களம் இறங்கிய டேவிட் மில்லர் அந்த அணி 203 ரன்கள் எடுக்கும் வரை களத்தில் நின்றார்.
இவரது அதிரடி ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணி ரன்களை குவித்தது. இவ்வாறாக தென்னாப்பிரிக்க அணி 49.4 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
மேலும் படிக்க:SA Vs AUS, Innings Highlights: பலன் அளிக்குமா மில்லரின் போராட்டம்; ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு வைத்த தென்னாப்பிரிக்கா
மேலும் படிக்க: SA Vs AUS Semi Final: தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அரையிறுதி... இன்றும், நாளையும் மழை பெய்தால் வெற்றி யாருக்கு?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)