மேலும் அறிய

CSK Playoff: லக்னோவிடம் தோல்வி..தனக்கு தானே மண்ணைவாரி போட்ட சிஎஸ்கே... பிளே ஆஃப் கணக்கு என்ன?

சிஎஸ்கே 12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இப்போது ரசிகர்களின் ஒரே கேள்வி, சிஎஸ்கே இன்னும் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியுமா என்பதுதான்.

 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அடைந்த தோல்வி, ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியின் பிளேஆஃப் வாய்ப்புகளுக்கு பெரிய பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது. 

சிஎஸ்கே தோல்வி

தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட லக்னோ அணியிடம், சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. எகானா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷ் வெறும் 38 பந்துகளில் 90 ரன்கள் குவித்து லக்னோவின் வெற்றிக்கு உதவினார். இதனால் 188 ரன்கள் இலக்கை லக்னோ அணி 16.4 ஓவர்களிலேயே எட்டியது. இந்தத் தோல்வியால் சிஎஸ்கே 12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இப்போது ரசிகர்களின் ஒரே கேள்வி, சிஎஸ்கே இன்னும் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியுமா என்பதுதான்.

சிஎஸ்கேவின் தற்போதைய நிலை

சிஎஸ்கேவின் தற்போதைய நிலை மிகவும் எளிமையானது. அவர்கள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு செய்தால் 16 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களுக்குள் வர வாய்ப்பு இருக்கும். இருப்பினும், இப்போது அவர்களின் வாய்ப்பு மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைச் சார்ந்தே இருக்கிறது. சிஎஸ்கே தனது இறுதி லீக் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு அணிகளும் பிளேஆஃப் ரேசில் வலுவாக உள்ளன. குஜராத் அதிகபட்சமாக 20 புள்ளிகளையும், ஹைதராபாத் 18 புள்ளிகளையும் பெற வாய்ப்புள்ளது.

குறுக்கே வரும் கெளஷிக்

மற்ற அணிகளால் சிஎஸ்கேவிற்குச் சில சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் உள்ளது. அவர்களுக்கு இன்னும் டெல்லி, லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக 3 போட்டிகள் உள்ளன. ராஜஸ்தான் மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்றால், சிஎஸ்கேவின் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும். எனவே, ராஜஸ்தான் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும் என சிஎஸ்கே விரும்பும். தற்போது சிஎஸ்கேவின் நிகர ரன் ரேட் +0.027 ஆக உள்ளது. இது மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருப்பதால், ரன் ரேட் அடிப்படையில் முன்னேறுவது சிஎஸ்கேவிற்கு சவாலான காரியம். அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் செயல்பாடுகளையும் சிஎஸ்கே கவனிக்க வேண்டியுள்ளது. பஞ்சாப் அணி தனது கடைசி இரண்டு போட்டிகளில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளைச் சந்திக்கிறது. பஞ்சாப் ஒரு போட்டியில் தோற்றால் கூட, அது சிஎஸ்கேவிற்குச் சாதகமாக அமையும்.

14 புள்ளிகளுடன் தகுதி பெறுவது சாத்தியமா?

ஒருவேளை சிஎஸ்கே ஒரு போட்டியில் தோற்று 14 புள்ளிகளுடன் தகுதி பெற முடியுமா என்று கேட்டால், அது மிகவும் சிக்கலானது. ஆர்சிபி, குஜராத் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே 14 புள்ளிகளுடன் வலுவான ரன் ரேட்டில் உள்ளன. சிஎஸ்கே 14 புள்ளிகளுடன் உள்ளே நுழைய வேண்டுமானால், பஞ்சாப் கிங்ஸ் மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மீதமுள்ள 3 போட்டிகளில் 2-ல் தோற்க வேண்டும். இவை அனைத்தும் நடந்தாலும், சிஎஸ்கே தனது கடைசி போட்டியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரன் ரேட்டை உயர்த்தினால் மட்டுமே பிளேஆஃப் கனவு நனவாகும். சுருக்கமாகச் சொன்னால், சிஎஸ்கேவின் தலைவிதி இப்போது அவர்கள் கையில் மட்டும் இல்லை.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget