Chennaiyin Selvans: பொன்னியின் செல்வன்களாக மாறிய சி.எஸ்.கே. சிங்கங்கள்...! வைரலாகும் புகைப்படம்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை பொன்னியின் செல்வன்களாக சித்தரித்து சி.எஸ்.கே. புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகியது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டரில் பொன்னியின் செல்வன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் இருப்பது போல புகைப்படங்களை பதிவிட்டு, சென்னையின் செல்வன்ஸ் என்று பெயரிட்டுள்ளது.
The Superkings forged the golden era of the fandom and scripted history! 🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) September 30, 2022
PS: We Yellove You! 💛#WhistlePodu 🦁💛 pic.twitter.com/s15fcS10Et
அந்த புகைப்படத்தில்,தோனி, சுரெஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஸ்டீபன் ப்ளமிங் இடம்பெற்றுள்ளனர். இந்த படத்தில் யார்? யார்? என்னென்ன கதாபாத்திரம் என்று பதிவு செய்யவில்லை. ஆனாலும். அரசர் கால உடையில் வீர வாள்களுடன் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் உள்ளனர். சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டு, ஐ.பி.எஙல். போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற பிறகு அவருடைய புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை அணி தொடங்கப்பட்டது முதல் சென்னை அணிக்கா மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா ஆடி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராகவும், கேப்டனாகவும் பொறுப்பு வகித்தவர் ஜடேஜா. சென்னை அணியின் தொடக்க காலத்தில் தொடக்க வீரராக ஆடிய ஸ்டீபன் ப்ளமிங் தற்போது சென்னை அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த இரு ஆண்டுகளாக சென்னை அணியில் இருந்து ரெய்னா ஓரங்கட்டப்பதுடன், நடப்பாண்டில் நடைபெற்ற ஏலத்தில் ரெய்னாவை சென்னை அணி ஏலத்தில் எடுக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை 205 ஆட்டங்களில் ஆடியுள்ள சுரேஷ் ரெய்னா 1 சதம், 39 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 528 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக பொறுப்பு வகித்த தோனி இதுவரை 4 முறை ஐ.பி.எல். பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். மேலும், இந்த புகைப்படத்தில் ப்ராவோ, அஸ்வின், பாப் டுப்ளிசிஸ், உத்தப்பா ஆகியோர் இல்லை என்றும் சில ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : Watch Video: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வென்ற பிறகு பேருந்திலிருந்து கோலி ரசிகர்களை நோக்கி காட்டிய போன்.. வைரல் வீடியோ
மேலும் படிக்க : IND vs SA: ஒரே போட்டி: தோனியை முந்திய ரோகித்... ரிஸ்வானை பின்னுக்கு தள்ளிய சூர்யா.. சாதனைக்கு மேல் சாதனை..