மேலும் அறிய

Watch Video: பைப் வடிவிலான ஹுக்கா.. புகைவிட்டு தள்ளும் எம்.எஸ்.தோனி.. சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ!

எம்.எஸ். தோனி ஹூக்கா என்ற பைப் வடிவிலான சிகரெட்டை புகைபிடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி, மீண்டும் எப்போது கிரிக்கெட் விளையாட ஸ்டேடியத்தில் களமிறங்குவார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. எம்.எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று கிட்டத்தட்ட 4 கடந்தும், கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒருவராக ஜொலித்தார்.  

இந்தநிலையில், எம்.எஸ். தோனி ஹூக்கா என்ற பைப் வடிவிலான சிகரெட்டை புகைபிடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் பழையதா அல்லது சமீபத்திய வீடியோவா என்று தெரியவில்லை. எம்.எஸ். தோனி எப்போதும் தனது உடல் நலத்தில் மிகவும் அதிக அக்கறை கொண்ட நபர். 40 வயதில் தோனி தனது உடல்நலத்தில் எடுத்துகொள்ளும் அக்கறையை இக்கால இளைஞர்கள் யாரும் எடுத்துகொள்வதில்லை. 

எம்.எஸ். தோனி கிரிக்கெட்டை தவிர, ஜிம்மில் உடற்பயிற்சி, ரன்னிங், டென்னிஸ், கோல்ப் என விடுமுறை நாட்களிலும் பிற விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். இவர் விளையாடும் இந்த வீடியோக்கள் எப்படியாவது சமூக வலைதளங்களில் பரவியது. இப்படியான சூழ்நிலையில், தோனி புகைபிடிப்பது போன்ற வீடியோ பரவுவது பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “தோனி முதலில் தனது வாயில் ஹூக்காவை வைத்து புகையை உள்ளிழுத்துவிட்டு புகையை வெளியேற்றினார். தோனியின் இந்த வீடியோவுக்கு மக்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். ஒரு சிலர் இது அவரது தனிப்பட்ட செயல் என்றும், இளைஞருக்கு வழிகாட்டும் கேப்டனே இப்படி செய்யலாமா என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இது முதல்முறை அல்ல..!

முன்னதாக ஐபிஎல் 16-17 ஆண்டுகளில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லி விளையாடினார். அப்போது, பெய்லிக்கு எம்.எஸ் தோனியுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு Cricket.com.au என்ற இணையதளத்திற்கு ஜார்ஜ் பெய்லி, தோனி குறித்து பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர், “ தோனி தனது அறையில் அடிக்கடி ஹூக்காவை புகைப்பார். அவர் எப்போது ஷீஷா அல்லதை ஹூக்காவை தனது அறையில் வைத்துக்கொள்வார்.” என்று தெரிவித்தார். 

அப்போது இது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பினாலும், தற்போது அது உண்மை என நிரூபிக்கும்படி வீடியோ வெளியாகியுள்ளது. 

இந்தாண்டுடன் தோனி ஓய்வு..? 

ஐபிஎல் விளையாட்டை தொடர்ந்து தோனி, பாராசூட் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியை வகித்து வருகிறார். மேலும், ராணுவ வீரர்களுடன் பயிற்சி, விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபடும் வீடியோக்களும், புகைப்படங்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அடுத்ததாக தோனி எப்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்ற கேள்வி தான் அனைவரிடத்திலும் எழுந்து வருகிறார். 

தோனி 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஓய்வு குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பியபோது விளையாடுவேன் என்று தெரிவித்தார். அதன்படி, இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை தக்கவைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

2023ல் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனது. தோனி தனது வாழ்க்கையில் இதுவரை 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார், 218 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 38.79 சராசரி மற்றும் 135.92 ஸ்ட்ரைக் ரேட்டில் 24 அரை சதங்களுடன் 5082 ரன்கள் எடுத்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Breaking News LIVE: உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!
Breaking News LIVE: உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!
Villuppuram Power Shutdown: உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Embed widget