மேலும் அறிய

World Cup 2023: அனல் பறக்க போகும் 5 போட்டிகள்.. உலகக்கோப்பையில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!

நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, 5 போட்டிகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, 5 போட்டிகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஒருநாள் உலகக்கோப்பை தொடர்:

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணையை  சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி, உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது. சென்னை, ஐதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் நடைபெற உள்ள 5 போட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

01. இந்தியா - பாகிஸ்தான்:

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காட்டிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள போட்டி என்றால், இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ள லீக் போட்டி தான். இந்த இரு அணிகளும் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள போட்டியில் மோத உள்ளன. ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இதுவரை இரு அணிகளில் 7 முறை மோதியுள்ளன. அதில் ஒருமுறை கூட பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை என்ற வெற்றி வரலாற்றை இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த முறை இவ்விரு அணிகளும் உலகக்கோப்பை போட்டியில் மோதியபோது, ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 140 ரன்கள் குவிக்க, இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

02. இங்கிலாந்து - நியூசிலாந்து:

கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெறும் பவுண்டரிகளின் அடிப்படையில் நியூசிலாந்தை வீழ்த்தி, இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றதை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் தான், அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள, தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதனால், இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பன்மடங்கு அதிகரித்துள்ளது.

03. இந்தியா - ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் எப்போதுமே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.  இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 8ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற நிலையில் அதற்கு பழிவாங்குமா என்ற முனைப்பில் இந்த போட்டியை ரசிகரகள் எதிர்பார்த்துள்ளனர். 

04. ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா:

கடந்த உலகக்கோப்பை தொடரில் டூப்ளெசிஸ் தலைமையிலான தென்னாப்ரிக்க அணி, வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில், லீக் சுற்றில் அந்த அணி விளையாடிய கடைசி போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை தென்னாப்ரிக்கா அணியில் டூப்ளெசிஸ் விளையாடுவாரா என்பது இதுவரை தெளிவாகவில்லை. இந்த நிலையில், தான் அக்டோபர் 13ம் தேதி லக்னோவில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

05. வங்கதேசம் - ஆப்கானிஸ்தான்:

நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஆப்கானிஸ்தான் அணி தான். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற நட்சத்திர அணிகளை பின்னுக்கு தள்ளி, நேரடியாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், சக ஆசிய அணியான வங்கதேசத்திற்கு எதிராக ஆப்கான்ஸ்தான் அணி மோதும் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டி அக்டோபர் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Embed widget