மேலும் அறிய

ICC Rankings: யார்க்கர் கிங் பும்ரா - ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம், ஜெய்ஷவால் ஏறுமுகம், கோலி, ரோகித் நிலை என்ன?

ICC Rankings: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்திய வீரர் பும்ரா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ICC Rankings: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலில், இந்திய வீரர் ஜெய்ஷ்வால் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை:

கான்பூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய வீரர் அஷ்வின் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கான்பூர் டெஸ்டில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஜெய்ஷவால் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேநேரம், நட்சத்திர வீரர் கோலி, கான்பூர் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், 12வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரிஷப் பண்ட் 9வது இடம் பிடித்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா 15வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

பும்ரா படைத்த சாதனை:

நடப்பாண்டில் பும்ரா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது இது இரண்டாவது முறையாகும். அவர் கடந்த பிப்ரவரியில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறினார் . அதன்மூலம்,  டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த  முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். பும்ராவுக்கு முன், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசையில் சிறந்த இடத்தை பிடித்தவர் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆவார். இவர் 1979-80ல் ஐசிசியின் தரவரிசையில் 2வது இடத்தைப் பிடித்தார். முன்னதாக கடந்த பிப்ரவரியிலும் பும்ரா, அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் டெஸ்ட் பேட்டிங் தரவரிசை:

தரவரிசை எண் வீரர்கள் புள்ளிகள்
1 ஜோ ரூட் (இங்கிலாந்து) 899
2 கேன் வில்லியம்சன் (நியூசி) 829
3 ஜெய்ஷ்வால் (இந்தியா) 792
4 ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்தி) 757
5 உஷ்மான் கவாஜா (ஆஸ்தி) 728
6 விராட் கோலி (இந்தியா) 724
7 முகமது ரிஸ்வான் (பாக்) 720
7 மார்னஸ் லபுஷக்னே (ஆஸ்தி) 720
9 ரிஷப் பண்ட் (இந்தியா) 718
9 டேரில் மிட்செல் (நியூசி) 718

ஐசிசியின் டெஸ்ட் பவுலிங் தரவரிசை:

தரவரிசை எண் வீரர்கள் புள்ளிகள்
1 ஜஸ்பிரித் பும்ரா 870
2 அஷ்வின் 869
3 ஹேசல்வுட் 847
4 பாட் கம்மின்ஸ் 820
4 ககிசோ ரபாடா 820
6 ஜடேஜா 809
7 நாதன் லயன் 801
7 பிரபத் ஜெயசூர்யா 801
9 கைல் ஜேமிசன் 714
9 ஷாஹீன் ஷா அஃப்ரிடி 709

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget