BCCI Virat Kohli | கேப்டன்சியில் டாப் சாதனைகள் இருந்தும் கோலியை தூக்கியது சரியா? BCCI முடிவு அநீதியா? முழு டேட்டா இங்கே..
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக விராட் கோலி 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பதவிவகித்து வந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் நேற்று மிகப்பெரிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதாவது இனிமேல் இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஏற்கெனவே டி20 தொடர்களுக்கு அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒருநாள் அணிக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி திடீரென பிசிசிஐ நீக்கியது பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. மேலும் கங்குலிக்கு பிறகு பிசிசிஐ ஒரு இந்திய கேப்டனை தூக்கியுள்ளது என்றால் அது கோலியை தான். ஆனால் விராட் கோலி ஒன்றும் பிசிசிஐ தூக்கும் அளவிற்கு மோசமாக செயல்படவில்லை. அதற்கு சான்று அவருடைய சில ரெக்கார்டுகள் தான். அவை என்னென்ன? இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக விராட் கோலி 95 போட்டிகளில் செயல்பட்டுள்ளார். அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 தோல்வியும், ஒரு போட்டி டையும், 2 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான சதவிகிதம் வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் இவர் நான்காவது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் கேப்டனாக அதிக வெற்றி சதவிகிதம்(குறைந்தது 50 போட்டிகளில்):
கேப்டன்கள் | பதவிக்காலம் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமன் | முடிவில்லை | வெற்றி % |
கிளைவ் லையுடு | 1975-1985 | 84 | 64 | 18 | 1 | 1 | 77.71 |
ரிக்கி பாண்டிங் | 2002-2012 | 230 | 165 | 51 | 2 | 12 | 76.14 |
ஹன்சி குரோனி | 1994-2000 | 138 | 99 | 35 | 1 | 3 |
73.70 |
விராட் கோலி | 2013-2021 | 95 | 65 | 27 | 1 | 2 | 70.43 |
மைக்கேல் கிளார்க் | 2008-2015 | 74 | 50 | 21 | 0 | 3 | 70.42 |
ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள்:
கேப்டன்கள் | அடித்த ரன்கள் | பேட்டிங் சராசரி |
ரிக்கி பாண்டிங் | 8497 | 42.91 |
மகேந்திர சிங் தோனி |
6641 | 53.55 |
ஸ்டீபன் ஃபிளமிங் | 6295 | 32.78 |
அர்ஜூனா ரனதூங்கா | 5608 | 37.63 |
விராட் கோலி |
5449 | 72.65 |
ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள்:
கேப்டன்கள் | அடித்த ரன்கள் | பேட்டிங் சராசரி |
ரிக்கி பாண்டிங் | 6984 | 50.97 |
விராட் கோலி | 4211 | 87.72 |
கிரேம் ஸ்மித் | 3826 | 46.09 |
மகேந்திர சிங் தோனி | 3754 | 70.83 |
ஸ்டீபன் ஃபிளமிங் | 3442 | 41.97 |
சவுரவ் கங்குலி | 3359 | 51.67 |
ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அதிக சராசரி வைத்துள்ள வீரர்கள்:
கேப்டன்கள் | பேட்டிங் சராசரி |
விராட் கோலி | 72.65 |
ஏபிடிவில்லியர்ஸ் | 63.94 |
டூபிளசிஸ் | 57.62 |
மகேந்திர சிங் தோனி | 53.55 |
கேன் வில்லியம்சன் | 49.56 |
ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன்கள்:
கேப்டன்கள் | பதவிக்காலம் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமன் | முடிவில்லை | வெற்றி % |
மகேந்திர சிங் தோனி | 2007-2018 | 200 | 110 | 74 | 5 | 11 | 59.52 |
முகமது அசாரூதின் | 1990-1999 | 174 | 90 | 76 | 2 | 6 | 54.16 |
சவுரவ் கங்குலி | 1999-2005 | 147 | 76 | 66 | 0 | 5 | 53.52 |
விராட் கோலி | 2013-2021 | 95 | 65 | 27 | 1 | 2 | 70.43 |
இப்படி ஒருநாள் போட்டிகளில் பல சாதகமான ரெக்கார்டை வைத்துள்ள விராட் கோலியை திடீரென பிசிசிஐ கேப்டன் பதிவியிலிருந்து நீக்கியுள்ளது. மேலும் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய போது,”இனிமேல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக அதிக கவனம் செலுத்த உள்ளேன்” என அவர் கூறியிருந்தார். அப்படி இருக்கும் பட்சத்தில் நேற்று திடீரென விராட் கோலியை மாற்ற வேண்டிய காரணம் என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஐசிசி தொடர்கள் மட்டும் தான் ஒரே காரணம் என்றால் அதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வருவதால் அதை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் நடந்திருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் கோலியும் ஒருவர் என்பது அவருடைய தரவுகளில் இருந்து நமக்கு நிச்சயமாக தெரிய வருகிறது.
மேலும் படிக்க: மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு வருகிறாரா அஸ்வின்?- மனம்திறந்த புதிய கேப்டன் ரோகித் சர்மா