மேலும் அறிய

T20 Captaincy: சூர்யாவுக்கு ‘செக்’ வைத்த பிசிசிஐ.. டி20 க்கு கேப்னாகும் சேட்டன்.. அடுத்து கில் தான்

தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக, நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் அதிரடி மாற்றங்களைச் செய்ய பிசிசிஐ (BCCI) ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக, நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

2024 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் கேப்டனாகப் பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ் இந்தியா 52 போட்டிகளில் விளையாடி 42 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தோனி, கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான்களை விட அதிக வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ள சூர்யா, புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் வெற்றிகரமான டி20 கேப்டனாகத் திகழ்கிறார்.

சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி மற்றும் ஃபார்ம்

அவரது தலைமையின் கீழ் இந்த ஆண்டு இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தாலும், வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு புதிய கேப்டனை அறிவிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சூர்யகுமார் யாதவின் தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் சமீபகாலமாக கவலையளிக்கும் விதமாக உள்ளது. அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு விளையாடிய 40 போட்டிகளில் 921 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஆறு அரைசதங்கள் அடங்கும். அமெரிக்காவிற்கு எதிராக அவர் எடுத்த 84 ரன்களே அவரது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அவரைத் தக்கவைக்கவும், கேப்டன் பொறுப்பின் அழுத்தத்தைக் குறைக்கவும் பிசிசிஐ இந்த முடிவை எடுக்கலாம் எனத் தெரிகிறது.

ஏன் சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை?

முன்னதாக கேகேஆர் அணியை ஐபிஎல் சாம்பியனாக்கிய ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன. ஆனால் தற்போது சஞ்சு சாம்சன் பெயர் அந்தப் பந்தயத்தில் முதலிடத்தில் உள்ளது. 2026 டி20 உலகக்கோப்பையில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடாவிட்டாலும், விளையாடிய 5 இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார்.

குறிப்பாக இறுதிப்போட்டியில் அவர் ஆடிய 89 ரன்கள் விளாசிய அதிரடி ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நீண்ட காலம் வழிநடத்திய அனுபவம் கொண்ட சஞ்சு, தற்போது சிஎஸ்கே அணியால் வர்த்தக ரீதியாக வாங்கப்பட்டுள்ளார். அவர் ஒரு விக்கெட் கீப்பராக இருப்பதால் மைதானத்தில் ஆட்டத்தை எளிதாகக் கையாள முடியும் என்பது பிசிசிஐ-ன் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்தடுத்த தொடர்களும் புதிய மாற்றமும்

இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவே கேப்டனாக நீடிப்பார் என்றும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ-ன் இந்த அதிரடி முடிவு இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget