![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Viral Photo: அக்சர் படேல் - ரவீந்திர ஜடேஜா! ”ரெண்டு இல்ல நாலு பேரு” - வைரலாகும் கிரிக்கெட் க்ளிக்..
போட்டி முடிந்தபின், இந்திய வீரர்கள் அக்சர், ஜடேஜா ஆகியோரும், நியூசிலாந்து வீரர்கள் ரச்சினும், அஜாஸூம் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.
![Viral Photo: அக்சர் படேல் - ரவீந்திர ஜடேஜா! ”ரெண்டு இல்ல நாலு பேரு” - வைரலாகும் கிரிக்கெட் க்ளிக்.. Axar, Ajaz, Jadeja and Rachin's name pictures goes viral on twitter after second test match in mumbai Viral Photo: அக்சர் படேல் - ரவீந்திர ஜடேஜா! ”ரெண்டு இல்ல நாலு பேரு” - வைரலாகும் கிரிக்கெட் க்ளிக்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/06/62632502cd37f573d77a8f589d0887ba_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இதில், 3 டி20 போட்டிகளையும் வென்ற இந்திய அணி, அடுத்த நடந்து முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
கடைசியாக இந்திய அணி 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதற்கு பின்னர் 9 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் இழந்ததே இல்லை. இதனால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இந்தியாவின் 14ஆவது டெஸ்ட் தொடர் வெற்றி இது.
இந்நிலையில், இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்காக விளைடாடிய இந்தியாவில் பிறந்து நியூசி.,யில் செட்டிலான ரச்சீன் ரவீந்திரா, அஜாஸ் படேல் ஆகியோர் சிறப்பாக ஆடினர். முதல் டெஸ்ட் போட்டியின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரச்சின், அந்த போட்டி டிராவாக முக்கிய காரணமானார். அடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்து கிரிக்கெட்டில் சாதனைப் படைத்தார் அஜாஸ்.
அக்சர் - படேல் - ரவீந்திர - ஜடேஜா
இந்நிலையில், போட்டி முடிந்தபின், இந்திய வீரர்கள் அக்சர், ஜடேஜா ஆகியோரும், நியூசிலாந்து வீரர்கள் ரச்சினும், அஜாஸூம் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி உள்ளது. ஒருவரது பெயரின் இரண்டாம் பாதியில் இன்னொருவரின் பெயர் தொடங்குவதால் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தை அஷ்வின் எடுக்க, பிசிசிஐ பகிர, இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
In Sync! ☺️
— BCCI (@BCCI) December 6, 2021
How's that for a quartet! 🇮🇳 🇳🇿#INDvNZ #TeamIndia @Paytm pic.twitter.com/eKqDIIlx7m
INDvsNZ 2nd Test, Highlights: தொடங்கியதும் அடங்கியது நியூசி., 2வது டெஸ்டில் இமாலய வெற்றி பெற்ற இந்தியா!https://t.co/k7TEb1zln4#INDvNZ #IndiaVsNewZealand #TestSeries
— ABP Nadu (@abpnadu) December 6, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)