மேலும் அறிய

AUS Vs NED World Cup 2023: டெல்லியில் ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி தருமா நெதர்லாந்து - இன்று பலப்பரீட்சை..!

AUS Vs NED World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

AUS Vs NED World Cup 2023: டெல்லியில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின்  24வது லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை நெதர்லாந்து அணி எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பை:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 21 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா,  ஏழாவது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியா - நெதர்லாந்து மோதல்:

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.  இதுவரை விளையாடிய முதல் 4 லீக் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தலா 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அபார வெற்றிகளை பெற்று இருப்பது அந்த அணிக்கு ஊக்கம் அளித்துள்ளது. மறுமுனையில் நெதர்லாந்து  ஒரு வெற்றியையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளது. அதேநேரம், நடப்பு தொடரில் வலுவாக உள்ள தென்னாப்ரிக்காவை வீழ்த்திய ஒரே அணி என்ற நம்பிக்கையுடன் நெதர்லாந்து அணி இன்று களமிறங்குகிறது.

பலம் & பலவீனங்கள்:

இந்திய  மைதானங்களை கணிக்க முடியாமல் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவினாலும், கடைசி இரண்டு போட்டியில் மீண்டு வந்துள்ளது. ஓபனிங் பேட்ஸ்மேன் வார்னர் அபாரமான ஃபார்மில் உள்ளார். மற்ற வீரர்கள் நிலையாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். வேகப்பந்துவீச்சில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பினும், அவர்கள் நடப்பு தொடரில் சிறப்பாக செயல்படாதது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. நெதர்லாந்து அணிக்கு சர்வதேச போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாவிட்டாலும், விளையாடும் அனைத்து போட்டிகளிலும் முழு திறமையை வெளிப்படுத்துகிறது. ஏதாவது ஒரு வீரரை மட்டும் நம்பி இருக்காதது அந்த அணியின் பலமாக கருதப்படுகிறது. பந்துவீச்சிலும் இளம் வீரர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுகின்றனர். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி தரவும் வாய்ப்புள்ளது.  

நேருக்கு நேர்:

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அனைத்திலும் நெதர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது.

மைதானம் எப்படி?

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக அமைகிறது. குறுகிய எல்லைகளை கொண்டுள்ளதால் எளிதில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசலாம். அதேநேரம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அணுகூலமாக உள்ளது.  டாஸ் வென்றவர்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்து கடினமான இலக்கை நிர்ணயிக்கவே விரும்புவார்கள். 

உத்தேச அணி விவரங்கள்:

ஆஸ்திரேலியா:

மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங்/வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் ( கேப்டன்), லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget