இந்தியாவுடன் மல்லுகட்டும் அணி இதுதான்! டி20 அணியை அறிவித்த ஆஸ்திரேலியா..!
இந்த தொடர் வருகின்ற நவம்பர் 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 ஐ தொடர்ந்து, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்தநிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தொடர்:
இந்த தொடர் வருகின்ற நவம்பர் 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. புதிய டி20 கேப்டனான மேத்யூ வேட் தலைமையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற பெயர்களை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில், “2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக ஐந்து டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர்/டிசம்பரில் நடக்கும் குவாண்டாஸ் டி20 டூர் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக பின்வரும் 15 வீரர்கள் கொண்ட ஆண்கள் அணியை தேசிய தேர்வுக் குழு (என்எஸ்பி) பெயரிட்டுள்ளது.
SQUAD! There's more cricket to come in India next month, with Matthew Wade set to lead this talented bunch in five T20I's against India #INDvAUS pic.twitter.com/Mqc8cLe5Ur
— Cricket Australia (@CricketAus) October 28, 2023
அணி விவரம்:
இந்தத் தொடருக்கு மேத்யூ வேட் கேப்டனாக இருப்பார். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தென்னாப்பிரிக்க தொடரை தவறவிட்ட நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். காயம் காரணமாக ஆஷ்டன் அகர் பெயர்பரிசீலிக்கப்படவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் கேமரூன் கிரீன் நடண்டு வரும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா திரும்பி ஓய்வு எடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆரோன் ஃபின்ச் ஓய்வு பெற்றதில் இருந்து, ஆஸ்திரேலிய டி20 அணி நிரந்தர கேப்டன் இல்லாமல் தவித்து வருகிறது. தற்போது, மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸுக்கு பிறகு புதிதாக ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார் மேத்யூ வேட்
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி: மேத்யூ வேட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ் டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா
டி20 தொடர் எப்போது..?
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் அட்டவணை:
நவம்பர் 23: முதல் டி20, விசாகப்பட்டினம்
நவம்பர் 26: இரண்டாவது டி20, திருவனந்தபுரம்
நவம்பர் 28: மூன்றாவது டி20, கவுகாத்தி
டிசம்பர் 1: நான்காவது டி20, நாக்பூர்
டிசம்பர் 3: ஐந்தாவது டி20, ஹைதராபாத்