Aus vs Eng: இரண்டே நாளில் முடிந்த பெர்த் டெஸ்ட்.. ஹெட்டின் ஒன் மேன் ஷோ.. ஆஸ்திரேலிய அபார வெற்றி
டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இறுதியில் 83 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஷஸ் தொடர்:
ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இரு அணிகளும் தடுமாற்றம்:
நேற்றைய முதல் நாளில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்கமுடியாமல் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்து. ஆஸ்திரேலிய அணியில் மிட்சேல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் இன்று 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
205 ரன்கள் இலக்கு:
முதல் இன்னிங்சில் 40 ரன்கள் முன்னிலையை பெற்ற நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கினாலும், முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்து அணியின் ஓப்பனரான ஜாக் கிராலியின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் பிறகு ஸ்காட் போலாந்தின் அனல் தெறித்த வேகத்தில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் இங்கிலாந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஒற்றை ஆளாக முடித்த டிராவிஸ் ஹெட்:
பேட்டிங்கிற்கு கடினமாகத் தோன்றிய ஒரு ஆடுகளத்தில், ஆஸ்திரேலியா நான்காவது இன்னிங்ஸில் அதிரடியை கையில் எடுத்தனர்.குறிப்பாக டிராவிஸ் ஹெட் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை பின்னி எடுத்தார்., டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இறுதியில் 83 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அடித்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் நான்காவது வேகமான சதமாகும்.
100 off just 69 balls! Travis Head, what an innings! #Ashes | #MilestoneMoment | @nrmainsurance pic.twitter.com/oiV1QEneYp
— cricket.com.au (@cricketcomau) November 22, 2025
ஜாக் வெதரால்ட் 23 ரன்கள் எடுத்தார், மேலும் ஓரளவு ஃபார்மைத் தேடிக்கொண்டிருந்த மார்னஸ் லாபுசாக்னேவும் 51 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.





















