Asia Cup 2023: விராட் கோலியின் ரசிகர்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி கொடுத்த பல்பு - என்னனு தெரியுமா?
Asia Cup 2023: இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து கொண்டு இருந்தாலும், ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு தொடர் ஆசிய கோப்பைத் தொடர் தான்.
Asia Cup 2023: இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து கொண்டு இருந்தாலும், ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு தொடர். இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டி அளவிலான போட்டித் தொடர் என்பதால் மிகவும் கவனம் பெற்றுள்ளது. காரணம் இன்னும் ஒருமாதத்திற்கு பின்னர் அதாவது அக்டோபர் மாதம் துவக்கத்தில் அதாவது 5ஆம் தேதி உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இதனால், இந்திய அண்யின் ஆட்டம் இந்த தொடரில் எப்படி இருக்கப்போகிறது என்பதைக் காண கிரிக்கெட் உலகம் ஆவலாக உள்ளது. ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் எதிர்பார்க்கபடும் போட்டியாக இருக்கும் நிலையில், ஆஃப்கானின்ஸ் தான் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள மாற்றப்பட்ட அணியால் தற்போது விராட் கோலி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதாவது, இந்த தொடரில் இருந்து ஆஃப்கானிஸ்தான் அணி நவீன் உல்-ஹாக்கை நீக்கியுள்ளது. அதற்கான காரணத்தை அந்த அணி நிர்வாகம் வெளியிடவில்லை என்றாலும், ஆஃப்கானிஸ்தான் அணியின் இந்த முடிவு போசு பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக ஆடிய நவீன் உல்-ஹக்கிற்கும் பெங்களூரு அணியின் நட்சத்திரம் விராட் கோலிக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. இது களத்திலேயே பெரிய பிரச்சனையாக மாற, கம்பீரும் விராட் கோலிக்கு எதிராக களமிறங்கினார். ஒரு கட்டத்தில் பரபரப்பு அதிகரித்ததால், கை கலப்பு ஏற்பட்டு விடுமோ எனும் அளவிற்கு அச்சம் பார்ப்பவர்களுக்கு இருந்தது.
இந்த சண்டை அந்த களத்துடன் மட்டும் இல்லாமல் சமூக வலைதளத்திலும் எதிரொலித்தது. குறிப்பாக நவீன் உல்-ஹக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் குஜராத் அணியிடம் தோல்வியைச் சந்தித்தது. இதனை கிண்டலடிக்கும் வகையில் நவீன் தனது ஸ்டோரியை பதிவு செய்திருந்தார். இதனால் விராட் கோலி ரசிகர்கள் நவீனை கடுமையாக சாடினர்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆசிய கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இதனால் இருவருக்கும் இடையில் மீண்டும் அந்த சண்டை தொடரும் என நினைத்துக்கொண்டு இருக்கையில் ஆஃப்கானிஸ்தான் அணி நவீன் உல்-ஹாக்கை அணியில் இருந்து நீக்கியுள்ளது.
ஆசிய கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ராம் அலிகில், ரஷீத் கான், குல்பாடின் நைப், கரீம் ஜனத், அப்துல் ரஹ்மான், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், முஜீப் உர் ரஹ்மான் சஃபி, ஃபசல்ஹாக் பாரூக்கி.