Asia Cup 2023 India Squad: மீண்டு(ம்) வந்த கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி..!
ஆசியக்கோப்பை போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
Asia Cup 2023 Team India Squad: வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி பாகிஸ்தானில் ஆசியக் கோப்பையானது பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. இந்தநிலையில், இந்த போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நேரடியாக தங்களது இடத்தை தக்க வைத்து கொண்டனர்.
அதேநேரத்தில், சுப்மன் கில் எந்த காரணத்திற்காக இந்திய அணியில் இடம்பெறவில்லை என்று தற்போது வரை தெரியவில்லை. யாரும் எதிர்பார்க்காத வகையில் திலக் வர்மா இந்திய அணியில் இடம்பிடித்தது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக் வாய்ப்பு மறுப்பு:
2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியில் மூத்த லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெறவில்லை. இருப்பினும், சாம்சன் ரிசர்வ் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Team India🇮🇳 Squad for #AsiaCup2023.#AsiaCup pic.twitter.com/GxZOWCldMG
— Manobala Vijayabalan (@ManobalaV) August 21, 2023
வலுவான மிடில் ஆர்டர்:
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். மிக நீண்ட காலமாக கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்துடன் போராடி வந்த நிலையில், தற்போது இரு வீரர்களும் முழு உடல் தகுதியுடன் உள்ளனர். கே.எல். ராகுல் கடைசியாக ஐபிஎல் 2023 சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறினார். அதன் பிறகு அவரால் போட்டி முழுவதும் விளையாட முடியவில்லை. இந்திய அணி மிக நீண்ட காலமாக மிடில் ஆர்டரில் தடுமாறி கொண்டிருந்தநிலையில், கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியதால் பலமாக பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி:
2023 ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30 முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில், இந்திய அணி 2023 ஆசிய கோப்பையில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை செப்டம்பர் 2 ஆம் தேதி விளையாடுகிறது. அதே நேரத்தில், ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டி செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
ஆசியக் கோப்பைக்கான இந்தியாவின் 17 பேர் கொண்ட அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (ரிசர்வ் விக்கெட் கீப்பர்)