Asia Cup 2023: அப்போ இதுவும் போச்சா... ஆசியக் கோப்பையை மிஸ் செய்யும் முக்கிய வீரர்கள்.. கையை விட்டுப்போகும் ட்ராஃபி?
கடந்த ஆண்டு முதல் டீம் இந்தியாவிலிருந்து வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் வேகமாக உடற்தகுதி பெற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பல வீரர்கள் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகின்றனர். இதில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ரா ஆகிய 3 முக்கிய வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஐபிஎல் 16வது சீசன் தொடரின் பாதியில் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்போதுவரை அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் திரும்புவாரா என்பது கேள்விகுறியாக உள்ளது.
இவரை போன்று ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இவரும் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெற்று வரும், இவர் இன்னும் முதுகுவலி பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் வருகின்ற ஆகஸ்ட்-செப்டம்பரில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை 2023 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெற உள்ளது. ஹைபிரிட் மாடலின் கீழ் நடைபெறும் இந்த ஆசிய கோப்பையில், இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடவுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைக்கான முன்னேற்பாடுகளைப் பார்க்கும்போது, இது இந்திய அணிக்கு பெரும் அடியாகக் கருதப்படுகிறது. உலகக் கோப்பைக்கான முக்கிய அணியை அறிவிக்க ஐசிசி ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா:
கடந்த ஆண்டு முதல் டீம் இந்தியாவிலிருந்து வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் வேகமாக உடற்தகுதி பெற்று வருகிறார். தற்போது வரை அவர் 70 சதவீதம் வரை உடற்தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் பும்ரா இடம்பெறலாம். ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை இந்திய அணிக்காக மொத்தம் 10 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 49 டி20 போட்டிகளில் விளையாடிள்ளார். அதில், டெஸ்ட்டில் 666 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1631 ரன்களும், டி20 யில் 1043 ரன்களும் எடுத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணியிலும் அவர் இடம்பெறவில்லை.
கணிக்கப்பட்ட18 பேர் கொண்ட இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, எம்.டி. சிராஜ், எம்.டி. ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், மற்றும் சஞ்சு சாம்சன்.