மேலும் அறிய

Asia Cup 2023: தொடரை நடத்தும் இலங்கைக்கு வந்த சோதனை.. சி.எஸ்.கே அணி வீரரை நம்பி களமிறங்க முடிவு?

நாளை மறுநாள் இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் ஒருநாள் போட்டி வடிவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் ஒருநாள் போட்டி வடிவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடத்துகின்றன. இம்முறை தொடரை நடத்தும் இலங்கை அணிக்கு பெரும் சவால் தொடர் துவங்குவதற்கு முன்னதாவே துவங்கியுள்ளது.

அதாவது, வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்க காயம் அடைந்துள்ளதால் ஆசிய கோப்பைத் தொடரில்  இருந்து வெளியேற்றப்பட்டார். காயமடைந்த இலங்கை வீரர்களின் பட்டியலில் லஹிரு குமார , துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் உள்ளனர் . கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சிப் போட்டியின் போது மதுஷங்கவுக்கு சாய்ந்த தசைகள் கிழிந்ததால், வரவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்குள் அவர் குணமடைவார் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் மருத்துவக் குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா , மதுஷங்க காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Asia Cup 2023: தொடரை நடத்தும் இலங்கைக்கு வந்த சோதனை..  சி.எஸ்.கே அணி வீரரை நம்பி களமிறங்க முடிவு?

ஏற்கன்வே பெக்டோரல் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள சமீர, ஆசியக் கோப்பையில் இருந்தும் வெளியேறினார், மேலும் உலகக் கோப்பையின் தொடக்கத்திலும் சந்தேகத்திற்குரிய வீரராக காணப்படுகிறார் என்று விளையாட்டு துறை சார்ந்த செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.  லெக்-ஸ்பின்னர் ஹசரங்கா தொடையில் ஏற்பட்ட பிரச்னையில் இருந்து மீண்டு வருகிறார், மேலும் அவர் ஆசிய கோப்பையில் பங்கேற்காமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

குமார, சமீர மற்றும் மதுஷங்க ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற  உலகக் கோப்பை தகுதிச் சுற்று வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் இல்லாத நிலையில், கசுன் ராஜித, பிரமோத் மதுஷன், மற்றும் மதீஷ பத்திரன போன்றவர்களை நம்பியிருக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது, அதேவேளையில் ஹசரங்கவிற்குப் பதிலாக துனித் வெல்லலகே மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோரில் யாராவது ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு போட்டி அட்டவணை: 

தேதி         குரூப் லீக் போட்டிகள் இடம் 
ஆகஸ்ட் - 30     பாகிஸ்தான் vs நேபாளம்  முல்தான் (பாகிஸ்தான்)
ஆகஸ்ட் - 31 வங்கதேசம் vs இலங்கை கண்டி (இலங்கை)
செப்டம்பர் -2 பாகிஸ்தான் vs இந்தியா கண்டி (இலங்கை)
செப்டம்பர் -3 வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -4 இந்தியா vs நேபாளம் கண்டி (இலங்கை)
செப்டம்பர் -5 ஆப்கானிஸ்தான் vs இலங்கை லாகூர் (பாகிஸ்தான்)
  சூப்பர் 4 சுற்றுகள்  
செப்டம்பர் -6 A1 vs B2 லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -9 B1 vs B2  கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -10 A1 vs A2 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -12 A2 vs B1 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -14 A1 vs B2 கொழும்பு (இலங்கை)
  இறுதிப்போட்டி  
செப்டம்பர் -17 சூப்பர் 4 சுற்று - 1 vs 2 கொழும்பு (இலங்கை)
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget